சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 1000 பேர்

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
பீஜிங்: சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருந்த நிலையில், அதன் தொழிற்சாலையின் சுமார் 1000 பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.சீனாவின் டியன்ஜின் மாநகராட்சியில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிச்சாலைக்கு நியூசிலாந்தில் இருந்தும், உக்ரைனில் இருந்தும் பால் பவுடர் இறக்குமதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில்
IceCream, China, TestsPositive, Coronavirus, Quarantine, ஐஸ்கிரீம், சீனா, கொரோனா, தனிமைப்படுத்தல்

பீஜிங்: சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருந்த நிலையில், அதன் தொழிற்சாலையின் சுமார் 1000 பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவின் டியன்ஜின் மாநகராட்சியில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிச்சாலைக்கு நியூசிலாந்தில் இருந்தும், உக்ரைனில் இருந்தும் பால் பவுடர் இறக்குமதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால், உடனடியாக அந்த ஐஸ்கிரீம் தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டது. மேலும், தொழிற்சாலையில் உள்ள அனைத்து ஐஸ்கிரீம்களும் அப்புறப்படுத்தப்பட்டன.


latest tamil news


ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் வேலை செய்துவந்தவர்களில் 3 பேரின் மாதிரிகளை சோதித்ததில் மூவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பணியாளர்கள் 1600 பேரையும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இதுவரை 700 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், அதில் யாருக்கும் தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் அனைவரும் பரிசோதனை முடிவுகள் வரும்வரையில் தனிமைப்படுத்தி இருக்க அந்த தொழிற்சாலை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
17-ஜன-202118:26:21 IST Report Abuse
oce முதலில் ஆட்களை தொற்றியது.இப்போ இறக்குமதி உணவு பண்டங்களில் தொற்றுகிறது. வரும் காலங்களில் எதன் மூலமெல்லாம் தொற்றப் போகிறதோ
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
17-ஜன-202115:11:24 IST Report Abuse
Allah Daniel நம்ம ஊரு கம்யூனிஸ்டுங்களுக்கு கொஞ்சம் தந்திருக்கலாம்...
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
17-ஜன-202115:10:40 IST Report Abuse
Allah Daniel எல்லாம் வெளிநாட்டில் இருந்து வந்த ஐஸ் கிரேமுங்க...எப்படி உருகாம இருந்துச்சின்னு கேட்காதீங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X