புதுடில்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள் மற்றும் காவலர்கள் என 95 பேருக்கு சனிக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் ஒரு காவலருக்கு ஒவ்வாமை உண்டானது. அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி நேற்று நாடு முழுவதும் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி போடப்படுகிறது. 1.91 லட்சம் பேருக்கு முதல் நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மஹா., மற்றும் ஒடிஷாவில் தடுப்பூசி திட்டத்தை கையாளும் கோவின் செயலியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அங்கு ஜன., 18-க்கு தடுப்பூசி போடும் பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் டில்லியில் தடுப்பூசி போடப்பட்ட 51 பேருக்கு லேசான ஒவ்வாமை ஏற்பட்டதாக மாநில அரசு அதிகாரிகள் ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர். ஒருவருக்கு மட்டும் தீவிர ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அதே போல் எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று 95 பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் காவலர் ஒருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. அவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE