பொது செய்தி

இந்தியா

ஒரு லட்சம் டிராக்டரில் பேரணி: விவசாயிகள் முடிவு

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி: குடியரசு தினத்தன்று ஒரு லட்சம் டிராக்டரில் பேரணி செல்லவுள்ளதாக விவசாய சங்கங்களின் ஒரு பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி எல்லையில் விவசாயிகள் 50 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தலையிட்ட உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்தது.
TractorRally, Farmers, FarmLaws, Delhi, டில்லி, விவசாயிகள், போராட்டம், வேளாண் சட்டம், டிராக்டர், பேரணி

புதுடில்லி: குடியரசு தினத்தன்று ஒரு லட்சம் டிராக்டரில் பேரணி செல்லவுள்ளதாக விவசாய சங்கங்களின் ஒரு பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி எல்லையில் விவசாயிகள் 50 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தலையிட்ட உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு மற்றும் விவசாயிகளுடன் பேச நான்கு பேர் அடங்கிய குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு - விவசாய சங்க பிரதிநிதிகள் இடையே நடந்த 9ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வரும் 19ம் தேதி மீண்டும் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


இந்நிலையில், வரும் 26ம் தேதி குடியரசு தினத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாயிகள் சங்கங்கள் அறிவித்தன. இதற்கு முன்னோட்டமாக சமீபத்தில் டிராக்டர் பேரணி சென்றனர். குடியரசு தினத்தில் நடக்கவுள்ள பேரணியில் சுமார் ஒரு லட்சம் டிராக்டர்களில் விவசாயிகள் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக போராட்டம் நடத்தும் விவசாய சங்கங்களின் ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதற்காக பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்த டிராக்டர்களில் விவசாயிகள் கிளம்பியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-ஜன-202103:35:49 IST Report Abuse
J.V. Iyer பணக்கார இடைத்தரகர்கள்-விவசாயிகளாக இருக்கிறார்களே? பிறகு லட்சம் விமான ஊர்வலம். நடத்துங்கள். இது சுதந்திர நாடு.
Rate this:
Cancel
raskoolu - Madurai,இந்தியா
17-ஜன-202123:10:33 IST Report Abuse
raskoolu இப்போ அரசு துணை ராணுவத்தை இறக்கப் போகிறது. அதன் பின்னர் குத்துதே குடையுதேன்னு அழக்கூடாது.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
17-ஜன-202120:24:04 IST Report Abuse
vbs manian ஒரு சிறிய கும்பல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சவால் விடுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X