பொது செய்தி

தமிழ்நாடு

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பாடதிட்டங்கள் குறைப்பு

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பாடதிட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி டிவி வழியே பாடங்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்களின் கருத்துகளை கேட்டு 10
பாடத்திட்டம், தமிழக அரசு, பள்ளிகள் பத்தாம் வகுப்பு, பிளஸ்2, மாணவர்கள்,

சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பாடதிட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி டிவி வழியே பாடங்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்களின் கருத்துகளை கேட்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பாட திட்டம் குறைப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.


40% பாட திட்டங்கள் குறைப்பு

latest tamil news





இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 50 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம், குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பற்றிய முழு விவரங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்த குறைக்கப்பட்ட பாடதிட்டம் குறித்த விவரங்கள், பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட உள்ளன. அதன் அடிப்படையில், இந்த கல்வி ஆண்டில், மீதம் உள்ள நாட்களில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஜன-202117:00:45 IST Report Abuse
ஆரூர் ரங் திராவிஷ வரலாற்றை நீக்கினாலே அடுத்த தலைமுறை🐣 வாழ்த்தும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X