கவுகாத்தி: ரயில்வே ஒப்பந்தங்களை வழங்க சாதகமாக நடக்க ரூ.1 கோடி லஞ்சம் வாங்கிய, ரயில்வே பொறியாளர் சேவை பிரிவு(ஐஆர்இஎஸ்) அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்
அசாம் மாநிலம் மலிகோவானில் உள்ள வடகிழக்கு முன்னணி ரயில்வேயில், பணிபுரிபவர் மகேந்தர் சிங் சவுகான். இவர், 1985ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த ஐஆர்இஎஸ் அதிகாரி ஆவார். இவர், ரயில்வே ஒப்பந்தத்தை, தனியாருக்கு வழங்குவதில் சாதகமாக நடந்து கொள்வதற்காக ரூ.1 கோடி லஞ்சம் வாங்கும் போது, கையும் களவுமாக சிபிஐ அதிகாரிகள் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, டில்லி, அசாம், உத்தர்கண்டில் 22 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE