பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: தமிழிசை

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: தடுப்பூசி விவகாரத்தில் தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம் என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தெலுங்கானா கவர்னராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் தமது இல்லத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: எந்த நாட்டையும் சாராமல் மருந்து
TamilisaiSoundararajan, CovidVaccine, TelanganaGuv, தெலுங்கானா, கவர்னர், தமிழிசை சவுந்திரராஜன், கொரோனா, தடுப்பூசி

சென்னை: தடுப்பூசி விவகாரத்தில் தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம் என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெலுங்கானா கவர்னராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் தமது இல்லத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: எந்த நாட்டையும் சாராமல் மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி. ஒரு தாய் 10 மாதங்களாக குழந்தை பெற்றடுப்பது போன்று நம் நாட்டின் விஞ்ஞானிகள் நம்மை இரவு பகல் பாராமல் உழைத்து காத்துள்ளனர். நமது நாடு 150 நாடுகளுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை தர உள்ளோம். தடுப்பூசி விவகாரத்தில் தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம்.


latest tamil news



அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகள் சேர்ந்து இந்த கொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடித்துள்ளனர். நேற்று 2 லட்சம் பேர் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை. முன்களப்பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதே அவசியம். பிரதமரும், அரசியல் கட்சி தலைவர்களும் மக்களுக்கு தடுப்பூசி வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. தமிழகத்தில் தாமரை மலர்ந்தது போன்று முக மலர்ச்சியோடு தடுப்பூசியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-ஜன-202112:39:29 IST Report Abuse
Malick Raja ஆடிய ஆட்டங்களுக்கு ஓய்வெடுக்க ஆளுநர் பதவியன்றோ ? அது உண்மையன்றோ ? கூறுவோர் யாருமுண்டோ ?
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
18-ஜன-202112:08:50 IST Report Abuse
pattikkaattaan முதலில் அரசியல் தலைவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துங்கள் .. மற்ற நாடுகளில் முதலில் தலைவர்கள் போட்டுக்கொண்டுள்ளனர் ..
Rate this:
Cancel
Suresh - Chennai,இந்தியா
17-ஜன-202119:09:33 IST Report Abuse
Suresh அப்போ நீங்களும் மோடியும் முதலில் கோவாக்ஸின் தடுப்பு ஊசியை போட்டு எடுத்து காட்டாக செயல் படுங்கள்.. சும்மா வாய்ல வடை சுடாதீங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X