காங்கிரஸ் சொல்வதை நம்ப வேண்டாம்: அமித்ஷா

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
பகல்கோட்: காங்கிரஸ் சொல்வதை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விரைவில் இந்தியா கொரோனா இல்லாத நாடாக மாறும் என தெரிவித்துள்ளார்.கர்நாடக மாநிலம் பகல்கோட்டில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: 4 தலைமுறையாக ஆட்சி செய்த காங்கிரசிடம், ஏழை பெண்களுக்கு ஏன் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படவில்லை? ஏழைகளுக்கு, வீடுகள், மின்சாரம், கழிப்பறை
congress, cong, amitshah,  hmamitshah, bjp, corona, coronavirus, பாஜ, அமித்ஷா, கொரோனா, கொரோனாவைரஸ் காங்கிரஸ், உள்துறை அமைச்சர் அமித்ஷா,

பகல்கோட்: காங்கிரஸ் சொல்வதை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விரைவில் இந்தியா கொரோனா இல்லாத நாடாக மாறும் என தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பகல்கோட்டில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: 4 தலைமுறையாக ஆட்சி செய்த காங்கிரசிடம், ஏழை பெண்களுக்கு ஏன் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படவில்லை? ஏழைகளுக்கு, வீடுகள், மின்சாரம், கழிப்பறை ஆகியவை ஏற்படுத்தி கொடுக்கவிரும்பவில்லை என கேள்வி கேட்க விரும்புகிறேன். வறுமையை ஒழிக்க அக்கட்சிக்கு விருப்பம் இல்லாததே அதற்கு காரணம்.


latest tamil news




கொரோனா தடுப்பூசி குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. போராடுவதை தவிர வேறு ஒன்றும் காங்கிரஸ் செய்யாது என்பது நமக்கு தெரியும். குறைந்தபட்சம், அடுத்தவரின் முயற்சிகளில் தலையிடாமல் இருங்கள். இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ள இரண்டு தடுப்பூசிகளும் முற்றிலும் பாதுகாப்பானது. காங்கிரஸ் சொல்வதை நம்ப வேண்டாம். உங்களுக்கான வாய்ப்பு வரும் போது, தடுப்பூசி போட்டு கொள்ளலாம். விரைவில், இந்தியா கொரோனா பாதிப்பு இல்லாத நாடாக மாறும்.

முன்பு, பொம்மைகளை சீனாவில் இருந்து வாங்கினோம் தற்போது, இந்தியாவின் முதல் பொம்மை தொழிற்சாலை, கொப்பலில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள குழந்தைகள், அங்கு தயாரிக்கப்படும் பொம்மைகளை வைத்து விளையாடுவார்கள் என்பதை நினைத்து நீங்கள் பெருமைப்பட வேண்டும். இனி சீனாவில் இருந்து வாங்க தேவையில்லை. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
18-ஜன-202115:16:48 IST Report Abuse
Sridhar இவரு என்ன எதோ மக்கள் காங்கிரெஸ் கட்சிய நம்பர மாதிரியும் இவர் சொல்லித்தான் அவர்களுக்கு தெரியவேண்டிய மாதிரியும் பேசறாரு
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-ஜன-202114:35:04 IST Report Abuse
தமிழவேல் தலைகள் சொல்றாப்போலவே, மத்தவங்களுக்குத் தேவைப்படும்னு, எல்லா காவிகளும் பெருந்தன்மையா ஊசி போட்டுக்க மாட்டாங்க...... தியாகிகள்..
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-ஜன-202113:09:33 IST Report Abuse
Malick Raja காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது பெட்ரோல் விலை ரூ 67 ங்கோ .. குருடாயில் விலையோ 110 டாலருங்கோ .. நாங்க அன்னிக்கு போராட்டம் சென்ஜோமுங்கோ .. நாங்க வந்தவுடன் பெட்ரோல் விலை ரூ 50 க்கு வந்துடுமுன்னு சொன்னோமுங்கோ .. இப்போ ப்பாருங்க பெட்ரோல் விலை ரூ 87 தானுங்கோ ..குருடாயில் விலையோ வெறும் 35 டாலர்தானுங்கோ ..மலிவுதானுங்கோ . ஆனால் பெட்ரோல் விலையை நல்ல வளர்ச்சிக்கு கொண்டு வந்துட்டோமுகோ . இதை காங்கிரஸ் காரன் சொன்னா நம்பாதீங்கோ .. பார்த்து ஓட்டுக்களை போடுங்கோ .. வரட்டுமா ?
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
18-ஜன-202115:13:52 IST Report Abuse
Sridharவேறு நாடுகளில் பெட்ரோல் என்ன விலை என்று தெரியுமா? இந்த கொரோனவால் வந்த நெருக்கடியான சூழ்நிலையில் அரசுக்கு ஏழை மக்களுக்கு உணவளிக்க நிதி தேவைப்படும்போது, வாகனம் ஓட்டும் வசதிப்படைத்தவர்களிடமிருந்து வசூலிக்காமல், விவசாயிகளிடமிருந்தா வசூலிக்கமுடியும்? நாட்டின் GDP கடுமையான வீழ்ச்சி அடைந்த நிலையில் யாராவது பசி பட்டினியுடன் இருக்கிறார்களா? மாஸ்டர் படம் நூறு கோடிக்கு மேல் வசூல் வேற இந்த விலையில் பெட்ரோல் விற்கப்படும்போது, மன்மோகன் போன்ற சாதாரண ஆட்கள் பிரதமராக இருந்திருந்தால், பணவீக்கம் எகிறியிருக்கும். அரசின் தலைமை நாட்டுப்பற்றோடு திறமையாகவும் பொருளாதாரத்தை கையாளுவதால், மற்ற விலைவாசிகள் ஏறாமல் இருக்கின்றன. கொஞ்சம் மூளையையும் யூஸ் பண்ணுங்கோ முடிஞ்சா......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X