தடுப்பூசிகளுக்கான பெருமை விஞ்ஞானிகளையே சேர வேண்டும்: ப.சிதம்பரம்

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (103)
Share
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா போரில் நாம் வெற்றிக் கண்டால் அப்பெருமை விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்களையே சேர வேண்டும் என காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்திருப்பது பிரதமர் மோடி தலைமைக்கு கிடைத்திருக்கும் பெருமை என பா.ஜ.,வினர் பாராட்டி
Chidambaram, Congress, Credits, Scientists, Researchers, சிதம்பரம், காங்கிரஸ், கொரோனா, தடுப்பூசி, பெருமை, விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள்

புதுடில்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா போரில் நாம் வெற்றிக் கண்டால் அப்பெருமை விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்களையே சேர வேண்டும் என காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்திருப்பது பிரதமர் மோடி தலைமைக்கு கிடைத்திருக்கும் பெருமை என பா.ஜ.,வினர் பாராட்டி வருகின்றனர். இது வரலாற்றுச் சாதனை என்ற அமித்ஷா, அது பற்றி ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்வதாக கூறியிருந்தார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், மோடியின் தலைமையின் கீழ் ஒவ்வொரு இந்தியரும் முக்கியமான கட்டத்தை கடந்திருப்பதாக குறிப்பிட்டார்.


latest tamil news


இந்நிலையில் தடுப்பூசிக்கான வெற்றி முழுக்க முழுக்க இந்தியா உள்ளிட்ட உலக விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்களையே சேரும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இது பற்றி டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: ‛மார்ச் 24 அன்று பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கை அறிவித்தார். கொரோனா சவாலை 18 நாள் மகாபாரத போருடன் ஒப்பிட்டு, இந்த (கொரோனா) போரை 21 நாட்களில் வெல்வோம் என்றார். அந்த நேரத்தில், அவர் அறிவியலிலோ அல்லது தடுப்பூசி உருவாக்கத்திலோ நம்பிக்கை வைக்கவில்லை. கொரோனாவுக்கு எதிரான போரை தடுப்பூசிகள் தான் வெல்லும். அரசாங்கமோ அல்லது புராண நம்பிக்கைகளோ அல்ல.

நாம் இந்த போரில் வெற்றி கண்டால் ஒட்டுமொத்த பெருமையும் இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் செல்ல வேண்டும். நமது விஞ்ஞானிகளுக்கு வணக்கம் செலுத்துவதோடு, அறிவியலை மேம்படுத்துவதற்கும் விஞ்ஞான மனநிலையை வளர்ப்பதற்கும் உறுதியேற்போம்.' என கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (103)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
18-ஜன-202115:53:30 IST Report Abuse
Velumani K. Sundaram ஐயா...போட்டோவையாவது சேஞ்சு பண்ணுங்க ப்ளீஸ்... இதே போட்டோக்களை நிரயமுறை பார்த்தாச்சு. எப்டீ இருந்தவர் இப்டீ ஆயிட்டார்.
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
18-ஜன-202115:26:14 IST Report Abuse
pradeesh parthasarathy மோடியின் பேச்சை கேட்டு இரவு ஒன்பது மணிக்கு எல்லோரும் குத்து விளக்கு ஏற்றினார்கள் .... கொரோனா ஒழிந்ததா ..? இல்லை மூட நம்பிக்கை தோற்றது ... இறுதியில் உலக விஞ்ஞானிகளின் முயற்ச்சி வெற்றி பெற்றது .... இப்போ ஏன் ஒருவனும் அதை பற்றி பேச காணோம் ...
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
18-ஜன-202117:01:52 IST Report Abuse
Dr. Suriyaஇப்படியும் எடுத்துக்கலாம்... அந்த கடவுளின் கருணையால் தான் அனைத்து மக்களின் வேண்டுதலால்தான் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல வருடங்கள் ஆகும் என்று கூறிய அதே விஞ்ஞானிகளால் இந்த கொரானா தடுப்பூசி விரைவில் கண்டு பிடிக்க முடிந்தது என்று ....விஞ்ஞானிகளும் அதைத்தான் கூறுகிறார்கள் .... எல்லாம் கடவுள் செயல் என்று....அந்த ஒருவன் என்பதை ஒருவர் என்று எழுதி பாருங்கள் உங்கள் மேல் உள்ள மதிப்பு கூடும் என்பது என் கருத்து........
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
18-ஜன-202115:01:25 IST Report Abuse
Sridhar விட்டால், ராவுல் காந்தி தான் வக்சினேயே கண்டுபிடித்தார் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X