புதுடில்லி: வேளாண் சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் வரும் 2024ம் ஆண்டு வரையில் போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
![]()
|
மத்திய அரசு வேளாண் திருத்த மசோதாவை நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் ,உ.பி., உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டில்லி எல்லைப்பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் கடந்த ஆண்டு நவ.,26-ம் தேதி முதல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசும் விவசாயி்களின் பிரதிநிதிகளுடன் 9 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இருப்பினும் விவசாயிகள் தங்களின் கொள்கைகளில் இருந்து பின்வாங்க போவதில்லை எனதெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே விவசாயிகளின் போராட்டத்தில் காலிஸ்தான் உள்ளிட்ட பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாகவும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து விவசாயிகளின் போராட்டத்தை நாங்கள் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்க மாட்டோம் என மத்திய அரசை எச்சரித்ததுடன் இதற்காக 4 பேர் கொண்ட குழு ஒன்றையும் அமைத்தது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்த விவசாய சங்கத்தினர் குழுவில் உள்ளவர்கள் வேளாண் சட்டத்தை ஆதரிப்பவர்களாக உள்ளனர். அவர்கள் மூலம் தீர்வு காண முடியாது என கூறி உள்ளனர்.
![]()
|
போராட்டம் தொடரும்
இந்நிலையில் நாக்பூரில் பாரதிய கிஷான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிக்கைட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: டில்லியில் நடைபெற்று வரும் போராட்டம் கருத்தியல் புரட்சி. வேளாண் மசோதாக்களை திரும்பபெறக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசு பிடிவாதமாக உள்ளது. இந்தபோராட்டம் நீண்ட காலம் தொடரும்.
தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் பணக்கார விவசாயிகளால் தூண்டப்படுகிறது. என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர் ஒவ்வொரு கிராம மக்களும் பல்வேறு சங்கத்தினரும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர் என்றார்.
2024 ம் ஆண்டு வரையில் போராட்டம்
மேலும் போராட்டம் எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற கேள்விக்கு வரும் 2024 ம் ஆண்டு மே மாதம் மத்திய அரசுக்கான தேர்தல் நடைபெறும். அதுவரையில் தற்போதைய மத்திய அரசு வேளாண் மசோதாவை வாபஸ் பெறாவிட்டால் 2024ம் ஆண்டு மே மாதம் வரையில் போராட தயாராக உள்ளோம்.
நாட்டில்எதிர்கட்சிகள் பலவீனமாக இருக்கிறது எனவே விவசாயிகள் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டத்திற்கு தயாராக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE