சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேனீக்கள் கொட்டி 17 பேர் படுகாயம்

Added : ஜன 17, 2021
Share
Advertisement
ஊத்துக்கோட்டை : பொங்கல் வைக்கும் போது படையெடுத்து வந்த தேனீக்கள் கொட்டியதில், 17 பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பூண்டி ஒன்றியம், கூடியம் கிராமத்தில் உள்ள குகைகளில், ஆதி மனிதன் வாழ்ந்தான் என்பதற்காக சான்றுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கிராமத்தை ஒட்டி, பல தலைமுறை களாக பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் காணும் பொங்கலை
 தேனீக்கள் கொட்டி 17 பேர் படுகாயம்

ஊத்துக்கோட்டை : பொங்கல் வைக்கும் போது படையெடுத்து வந்த தேனீக்கள் கொட்டியதில், 17 பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பூண்டி ஒன்றியம், கூடியம் கிராமத்தில் உள்ள குகைகளில், ஆதி மனிதன் வாழ்ந்தான் என்பதற்காக சான்றுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கிராமத்தை ஒட்டி, பல தலைமுறை களாக பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் காணும் பொங்கலை ஒட்டி, கடம்பத்துார் பகுதியில் இருந்து, இருளர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நேற்று முன்தினம் மாலை, அங்குள்ள மன்னாசி அம்மன் கோவிலுக்குச் சென்று, பொங்கல் வைத்தனர். அப்போது, அடுப்பில் இருந்து எழுந்த புகை அங்குள்ள மரத்தில் உள்ள தேன்கூட்டில் பரவியது.

இதில், தேனீக்கள் கூட்டில் இருந்து வெளியே வந்து பொங்கல் வைத்தவர்களை கடிக்க துவங்கியது. இதில், பல்லவி, 29, லோகேஸ்வரி, 23, நிஷாலி, 19, மோகன், 19, ரோஷன், 4, கிருஷ்ணன், 4, உள்ளிட்ட, 17 பேர் படுகாயம் அடைந்தனர்.அவர்கள், கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து பென்னலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.கடந்தாண்டு, இதேபோல், சுற்றுலா சென்ற, 20க்கும் மேற்பட்டோர் தேனீக்கள் கொட்டி காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X