வாஷிங்டன்:அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள, ஜோ பைடனின் நிர்வாகத்தில், இதுவரை, 20 இந்தியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது; அதில், 13 பேர் பெண்கள். பதவியேற்ற பின், பைடனின் நிர்வாகத்தில் மேலும் பல இந்திய வம்சாவளியினருக்கு முக்கிய பதவிகள் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக, ஜோ பைடன், 20ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்தியாவை பூர்வீகமாக உடைய, கமலா ஹாரிஸ், 56, துணை அதிபராக பதவி ஏற்க உள்ளார். அமெரிக்க வரலாற்றில், துணை அதிபராக, ஒரு பெண்; இந்திய - ஆப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர் பதவியேற்பது இதுவே முதல் முறையாகும்.அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போதே, 'இந்திய வம்சாவளியினருக்கு என் நிர்வாகத்தில் முக்கியப் பதவிகள் வழங்கப்படும்' என, ஜோ பைடன் கூறியிருந்தார்.
இதுவரை, தன் நிர்வாகத்துக்கு அவர் அறிவித்து உள்ளவர்களில், 20 பேர் இந்திய வம்சாவளியினர். அதில், 17 பேர் வெள்ளை மாளிகையின் முக்கியப் பதவியில் அமர உள்ளனர். இந்திய வம்சாவளியினரில், 13 பேர் பெண்கள் என்பது மற்றொரு சிறப்பம்சம். தன் நிர்வாகத்துக்கான அனைத்து பதவியிடங்களையும்,ஜோ பைடன் இன்னும் அறிவிக்கவில்லை.அதனால், அவர்
பதவியேற்ற பின், மேலும் சில இந்திய வம்சாவளியினர் முக்கிய பதவிகளில்இடம்பெறலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 1 சதவீதமே உள்ள இந்திய வம்சாவளி
யினருக்கு, முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது, புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், இந்தப் பதவிகள்வழங்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.இந்நிலையில் வெளியுறவுத் துறையில் சிவிலியன் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பு
செயலராக, இந்தியாவை பூர்வீகமாக உடைய, உஸ்ரா ஜேயாவை நியமிப்பதாக, பைடன் அறிவித்துள்ளார்.
முதல் நாளிலேயே 'பிசி'
அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, பல முக்கிய பிரச்னைகள் தொடர்பான, 12க்கும் மேற்பட்ட உத்தரவுகளில், ஜோ பைடன் கையெழுத்திட உள்ளதாக, வெள்ளை மாளிகையின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்க உள்ள, ரான் கிளென் கூறியுள்ளார்
*அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள், சமீபத்தில், 'கேப்பிடோல்' எனப்படும், பார்லிமென்ட்
கட்டடத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். ஜோ பைடன் பதவியேற்பு
விழாவையொட்டி, பார்லிமென்ட் கட்டடம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது.
*அவசர அழைப்பு வந்தால், உடனடியாக களமிறங்குவதற்காக, 'நேஷனல் கார்டு' எனப்படும், அதிரடிப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE