'மனித உரிமைமீறலில் ஈடுபடும் நாடுகளுடன் வர்த்தகம் கூடாது': சீனாவை மறைமுகமாகத் தாக்கும் பிரிட்டன்

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் தற்போது மோதல்போக்கு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது இருநாட்டு வெளியுறவுத்துறைகளும் இரு நாடுகளின் வர்த்தகத்தில் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. முன்னதாக ஹாங்காங்கில் தனது தேசியப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி அந்நாட்டை முழுவதுமாக கையகப்படுத்த முயன்றது சீனா.இதனை அடுத்து ஹாங்காங்வாசிகள் பலர் பிரிட்டனில்

சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் தற்போது மோதல்போக்கு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது இருநாட்டு வெளியுறவுத்துறைகளும் இரு நாடுகளின் வர்த்தகத்தில் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. முன்னதாக ஹாங்காங்கில் தனது தேசியப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி அந்நாட்டை முழுவதுமாக கையகப்படுத்த முயன்றது சீனா.இதனை அடுத்து ஹாங்காங்வாசிகள் பலர் பிரிட்டனில் குடியேறத் தொடங்கினர்.



latest tamil news



பிரிட்டனில் நிரந்தர குடியுரிமைபெற ஹாங்காங்வாசிகளுக்கு ஏற்ப சில சட்ட சலுகைகள் பிரிட்டன் அரசால் வழங்கப்பட்டன. இது சீனாவை ஆத்திரமூட்டியது. தற்போது சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் பழங்குடி இனமக்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்படுவதாக செய்தி வெளியாகியது. இது உலக ஊடகங்கள் இடையே வைரலாக சீனாவுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த பழங்குடி இன மக்கள் மனித உரிமை மீறலுக்கு உள்ளாவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஒரே நாளில் அதிக நேரம் இவர்கள் வேலைவாங்கப் படுவதாகவும் இவர்களது உழைப்பின் மூலம் தயாராகும் பொருட்களை அமெரிக்கா வாங்கப்போவதில்லை என்றும் டொனால்ட் ட்ரம்ப் அரசு அறிவித்திருந்தது. இதே கொள்கையை தற்போது போரிஸ் ஜான்சன் அரசும் பிரிட்டனில் பின்பற்றி உள்ளது.


latest tamil news



இதுகுறித்துப் பேசிய பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ரேப், ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்து ஏற்றுமதியாகும் எந்த பொருட்களையும் பிரிட்டன் வாங்கப்போவதில்லை என்று கட்டாயமாகக் கூறியுள்ளார். இது வரவேற்பைப் பெற்றிருந்தாலும் சீனாவை மேலும் கொதிப்படையச் செய்து உள்ளதை மறுக்க முடியாது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
18-ஜன-202117:10:45 IST Report Abuse
Velumani K. Sundaram ஜனாதிபதி டிரம்ப் இதை எதிர்த்து நின்றபோது பிரிட்டன் ஒதுங்கி நின்றார்கள். இப்போது சீனாவின் கைக்கூலி ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி எடுக்கும்போது பிரிட்டன்க்கு ஸ்பிரிட் வந்துவிட்டது. என்னடா உங்களின் வெங்காய அரசியல்...
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
19-ஜன-202107:38:25 IST Report Abuse
naadodiஉளறக்கூடாது..ஜோ பைடன் Xi ஜின்பிங் கை "Thug" என்று அழைத்ததை படியும்.....
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
18-ஜன-202113:50:18 IST Report Abuse
Rafi உலகை அடிமைப்படுத்தி வந்த நாடு, அதற்கு பரிகாரமாக இது போன்ற மனித உரிமை மீறலுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை வேற்றுமையில் ஒற்றுமை என்று வாழும் நாம் வரவேற்போம்.
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
18-ஜன-202106:05:17 IST Report Abuse
NicoleThomson இது நாள்வரை வரலாற்றில் எந்த நாடும் சீனாவிடம் வாலாட்டியதில்லை , அமைதியாக சென்று கொண்டிருக்கும் நாடுகள் தான் இந்த இல்லுமினாட்டி நாடுகளுக்கு பலியாவது , இவர்களின் பருப்பு சீனாவிடம் வேகாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X