அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா: இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., பங்கேற்பு

Updated : ஜன 19, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: தமிழகம் முழுதும், நேற்று எம்.ஜி.ஆரின், 104வது பிறந்த நாள் விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.அ.தி.மு.க., சார்பில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், எம்.ஜி.ஆர்., சிலையை சுற்றி, மேடை அமைக்கப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ஆகியோர், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா,இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.,

சென்னை: தமிழகம் முழுதும், நேற்று எம்.ஜி.ஆரின், 104வது பிறந்த நாள் விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.அ.தி.மு.க., சார்பில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், எம்.ஜி.ஆர்., சிலையை சுற்றி, மேடை அமைக்கப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ஆகியோர், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, மலர் துாவி வணங்கினர். அவர்களை தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள், மலர் துாவி வணங்கினர்.அதன்பின், முதல்வரும், துணை முதல்வரும் இணைந்து, கட்சிக் கொடியேற்றி, நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், இனிப்புகள் வழங்கினர்; அன்னதானத்தை துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள், திரளாக பங்கேற்றனர்.கட்சி அலுவலக நிகழ்ச்சி முடிந்ததும், அனைவரும் கிண்டி, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு சென்றனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள, எம்.ஜி.ஆர்., சிலைக்கு கீழே, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, அவரது படத்திற்கு, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்கள் மலர் துாவி, மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, முதல்வர், துணை முதல்வர் ஆகியோர், தங்கள் வீடுகளில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, எம்.ஜி.ஆர்., படத்திற்கு மரியாதை செலுத்தினர். சென்னை, தி.நகர், ராமச்சந்திரா சாலையில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை ஒட்டி, அ.தி.மு.க., மாநில இளைஞர் அணி இணை செயலர் சுனில் தலைமையில், 1,000 பேருக்கு, வேட்டி, சேலைகள், அன்னதானம் வழங்கப்பட்டன.

ஜெ., பேரவை வட்டச் செயலர் சுரேஷ்குமார், தொழில் அதிபர் சிவகுமார், விழுப்புரம் மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு இணை செயலர் ஜாகீர் உசேன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதேபோல், தமிழகம் முழுதும், அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அ.ம.மு.க., சார்பில், அக்கட்சி பொதுச்செயலர் தினகரன், கட்சியினருடன் சென்று, சென்னை, அண்ணா சாலையில் உள்ள, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appan - London,யுனைடெட் கிங்டம்
18-ஜன-202110:25:50 IST Report Abuse
Appan இப்போ அதிமுக உடைந்த சிர்குலைந்த வீடாக உள்ளது..எல்லா அரசியல் தலைவர்களும் அதிமுகவை எள்ளி நகையாடுகிறார்கள்.. ஒரு பக்கம் ஓபிஎஸ் தன்னை பற்றி விளம்பரம் கொடுக்கிறார்..மரு பாக்கம் இபிஎஸ் விளம்பரம் கொடுக்கிறார்கள்..இப்படி கட்சி நலம் கருதாமல் செயல் படுபவர்கள் எப்படி அதிமுகவை வழி நடத்த முடியும்?
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
18-ஜன-202113:54:34 IST Report Abuse
Dr. Suriyaநாலு வருசமா நடத்திக்கிட்டு தானே இருக்காங்க சுடலை கனவுல மண்ணை போட்டு.....இப்படியே நடத்திக்குவாங்க எதிர்காலத்திலையும்.... கவலையை விடுங்க.......
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-ஜன-202106:27:30 IST Report Abuse
Mani . V மாற்றுக் கட்சியினரும் (பாஜக) எம்ஜியார் பிறந்தநாளை கொண்டாடுவது வரவேற்கத்தக்கது.
Rate this:
Cancel
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
18-ஜன-202104:55:34 IST Report Abuse
கும்புடுறேன் சாமி அண்ணா நூற்றாண்டுக்கு கருணாநிதி பிரம்மாண்டமாக அண்ணா நினைவு நூலகத்தை கட்டினார் . எம்ஜியார் நூற்றாண்டுக்கு எம்ஜியாரின் கட்சி அந்த நூற்றாண்டுக்கு என்ன நினைவு கட்டிடத்தை எழுப்பியது ? அந்தளவுக்கு அவர் ஒர்த் இல்லைன்னு கண்டுக்காம விட்டுருச்சா ?
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
18-ஜன-202116:14:48 IST Report Abuse
Dr. Suriyaஒர்த் இல்லாத கட்டுமரம் செஞ்சத பார்த்து ஒர்த் உள்ள மக்கள் திலகத்துக்கு செய்தால் அது போல் ஒரு கேவலம் இந்த உலகத்தில் இல்லைன்னுதான்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X