அரசியல் செய்தி

தமிழ்நாடு

மன்ற நிர்வாகிகள் ஏமாற்றம்: கலைகிறது ரஜினி கூடாரம்

Updated : ஜன 19, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
சென்னை:ரஜினி மக்கள் மன்றத்தில், செல்வாக்கு மிகுந்த மாவட்ட செயலர்களாக இருந்த, மூன்று பேர், தி.மு.க.,வில் இணைந்துள்ளனர். கட்சி துவங்குவார் என எதிர்பார்த்த, அவரது ரசிகர்களின் கனவு கலைந்துள்ளதால், ரஜினி கூடாரம் காலியாகிறது.வரும் சட்டசபை தேர்தலில், நடிகர் ரஜினி கட்சி துவக்கி, தி.மு.க., ஆட்சிக்கு வருவதை தடுப்பார் என்ற எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் இருந்தது. ஆனால், உடல்
மக்கள் மன்றம், ரஜினி, ரஜினிகாந்த்,  திமுக, தி.மு.க., rajini, Rajinikanth, makkal mandram, DMk, D.m.k.,

சென்னை:ரஜினி மக்கள் மன்றத்தில், செல்வாக்கு மிகுந்த மாவட்ட செயலர்களாக இருந்த, மூன்று பேர், தி.மு.க.,வில் இணைந்துள்ளனர். கட்சி துவங்குவார் என எதிர்பார்த்த, அவரது ரசிகர்களின் கனவு கலைந்துள்ளதால், ரஜினி கூடாரம் காலியாகிறது.

வரும் சட்டசபை தேர்தலில், நடிகர் ரஜினி கட்சி துவக்கி, தி.மு.க., ஆட்சிக்கு வருவதை தடுப்பார் என்ற எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் இருந்தது. ஆனால், உடல் நலத்தை காரணம் காட்டி, கட்சி துவங்கப் போவதில்லை என, அறிவித்து விட்டார். தேர்தல் நேரத்தில், ரஜினியின் ஆன்மிக அரசியல் ஆதரவு, பா.ஜ., கூட்டணிக்கு கிடைக்கும் என, அக்கட்சியினர் எதிர்பார்த்தனர்; அதற்கும் வாய்ப்பு குறைந்துள்ளது.

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி, அவரது ரசிகர்கள், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதற்கும் ரஜினி செவிசாய்க்கவில்லை. மேலும், 'இது போன்ற போராட்டங்கள் வாயிலாக, என்னை காயப்படுத்தாதீர்கள்' என, அறிக்கை வெளியிட்டார்.இதையடுத்து, தமிழகம் முழுதும் உள்ள மன்ற நிர்வாகிகள், இனிமேலும் ரஜினிக்காக காத்திருக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். அதனால், மாற்று வழிகளை ஆராயத் துவங்கி உள்ளனர்.

இதையறிந்து, செல்வாக்குடன் உள்ள மன்ற நிர்வாகிகளை, தி.மு.க.,வுக்கு இழுக்கும் பணியில், 'ஐபேக்' தரப்பினர் ஈடுபட்டுஉள்ளனர். ரஜினிக்காக, தேர்தல் கமிஷனில், கட்சி பெயரை பதிவு செய்து வைத்திருந்த, துாத்துக்குடி மாவட்ட மன்ற செயலர் ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்ட செயலர் செந்தில் செல்வானந்த், தேனி மாவட்ட செயலர் ஆர்.கணேசன். தொழில்நுட்ப அணி தலைவர் கே.சரவணன், ராமநாதபுரம் மாவட்ட வர்த்தகர் அணி செயலர் எஸ்.முருகானந்தம் ஆகியோர், ஸ்டாலின் முன்னிலையில், நேற்று தி.மு.க.,வில் இணைந்தனர்.

ரஜினி மன்ற நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியில், மற்ற கட்சிகளும் இறங்கியுள்ளதால், ரஜினி கூடாரம் கலையத் துவங்கியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Delhi,யூ.எஸ்.ஏ
20-ஜன-202118:29:03 IST Report Abuse
Rajesh ரஜினிகாந்த் தான் ஒரு தலைவனாகும் தகுதியற்றவன் என்பதை நிரூபித்து விட்டான்
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
20-ஜன-202113:28:41 IST Report Abuse
Swaminathan Chandramouli முக்கியமான விஷயம் என்னவென்றால் ரஜினி சார் தான் இவ்வளவு வருடங்கள் கஷ்டப்பட்டு நடித்து சம்பாதித்த பணத்தை தான் ஆரம்பிக்க இருந்து கட்சியில் போட்டு அது கண் காணாமல் கரைந்து விழலுக்கு இறைத்த நீராகப்போய் அவர் தன கடைசி காலத்தில் தலையில் துண்டை போட்டுகொண்டு அலைய கூடாது என்று யோசனை செய்து தான் கட்சி ஆரம்பிப்பதை தவிர்த்தார் இது மிக நல்ல முடிவு . அவருக்கு வேறு எந்த சோர்ஸிலும் வரவு கிடையாது மற்ற கட்சியினர் கோடி கோடியாக கருப்பு பணம் வைத்துள்ளனர் அவர்கள் தோல்வியை சமாளித்து கொள்வார்கள் இவரால் முடியாது . இவர் ஒன்றும் பரம்பரை பணக்காரர் அல்ல ஊழல் வாதியும் அல்ல , திருடரும் அல்ல ரஜினி அவர்களே கட்சியும் வேண்டாம் , மன்றமும் வேண்டாம் , நீங்கள் நடிக்கவும் வேண்டாம் ,கடவுளை அனுதினமும் நினைத்து கொண்டு அமைதியாக காலத்தை ஓட்டுங்கள்
Rate this:
Cancel
ayyo paavam naan - chennai,இந்தியா
18-ஜன-202121:43:55 IST Report Abuse
ayyo paavam naan ரஜனி ரசிகர் மன்றம் என்பது ஒரு ரசிகர் மன்றம் என்ற அளவில் தான் பார்க்க வேண்டும். கூடாரம் என்பதற்கு அது வேண்டுமானால் மழைக்கு ஒதுங்கி நிற்க ஒரு இடமாக இருந்து இருக்கலாம். அவனவன் வேலையை விட்டு விட்டு கட்சி ரசிகர் மன்றம் என்றெல்லாம் அலைந்து தங்களது பணத்தை செலவழித்து கட்சிபணி ஆற்ற இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் ஆளில்லை. எல்லாம் உலகமாக்கப்பட்ட வர்த்தகம் தான். அது தெரிந்ததால் தான் ரஜனி ஒதுங்கிவிட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X