பொது செய்தி

இந்தியா

7 நகரங்களில் இருந்து படேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு ரயில் சேவை

Updated : ஜன 19, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (29+ 36)
Share
Advertisement
ஆமதாபாத்:உலகிலேயே மிகவும் உயரமான, சர்தார் வல்ல பாய் படேலின் சிலை அமைந்துள்ள குஜராத் மாநிலம் கேவாடியாவுக்கு, சென்னை உட்பட ஏழு நகரங்களில் இருந்து, நேரடி ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள கேவாடியாவில், சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
 படேல் சிலை,  கேவாடியா, ரயில் சேவை, பிரதமர், நரேந்திர மோடி

ஆமதாபாத்:உலகிலேயே மிகவும் உயரமான, சர்தார் வல்ல பாய் படேலின் சிலை அமைந்துள்ள குஜராத் மாநிலம் கேவாடியாவுக்கு, சென்னை உட்பட ஏழு நகரங்களில் இருந்து, நேரடி ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது.
இங்குள்ள கேவாடியாவில், சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
'ஒற்றுமை' சிலை என, அழைக்கப்படும் இந்த சிலை, உலகின் மிகவும் உயரமான சிலையாகும்.


வளர்ச்சிப் பணிகள்


இந்த சிலை அமைக்கப்பட்ட பின், அங்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக, புதிய ரயில்வே ஸ்டேஷனும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நகரங்களில் இருந்து, நேரடி ரயில் சேவை துவக்கப்பட்டுள்ளது.இந்த சேவைகளை,
பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று துவக்கி வைத்தார்.


ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்வாரணாசி, மும்பை தாதர், ஆமதாபாத், டில்லி ஹஸ்ரத் நிஜாமுதீன், ரேவா, சென்னை,
வதோதரா ஆகிய ஏழு நகரங்களில் இருந்து, எட்டு நேரடி ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. இதைத் தவிர, ஆமதாபாத் - கேவாடியா இடையே, ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட

உள்ளது.புதிய ரயில் சேவை, ரயில்வே ஸ்டேஷன் திறப்பு மற்றும் அகலப் பாதையாக மாற்றம்
உள்ளிட்டவற்றை துவக்கி வைத்து, மோடி பேசியதாவது:

ஒற்றுமை சிலையை பார்ப்பதற்கு, மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வருகின்றனர். இதுவரை,
50 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர்.தற்போது, ரயில் சேவையும் துவங்கியுள்ளதால், சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரிக்கும். அமெரிக்காவில் உள்ள, சுதந்திர தேவி சிலையைவிட அதிகமானோர், இந்த சிலையை பார்க்க வருகை தருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு

முன், சரக்கு ரயில்களுக்கான தனிப் பாதையை துவக்கி வைத்தேன். இதன் வாயிலாக, ரயில்வே எந்த அளவுக்கு வளர்ச்சியை, முன்னேற்றத்தை அடைந்து வருகிறது என்பதை உணரலாம்.
கடந்த, 2006ல் துவக்கப்பட்ட, அந்த திட்டத்தின் கீழ், 2014 வரை, ஒரு கி.மீ., தூரத்துக்கு கூட, ரயில் பாதை அமைக்கவில்லை. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே, 1,100 கி.மீ., தூரத்துக்கு ரயில் பாதையை அமைத்தோம்.

ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக, ஒரு நகரத்துக்கு பல்வேறு இடங்களில் இருந்து, புதிய ரயில் சேவை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சுற்றுலா மேம்படுவதுடன், இந்தப் பகுதி மக்களும் வளர்ச்சி பெறுவர்.ரயில்வேயில் கடந்த சில ஆண்டுகளில், அதிகளவு திட்டங்கள் வேகம் எடுத்துள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சி உதவியுடன், மிகப் பெரிய மாற்றத்தை ரயில்வே அடைந்துள்ளது.

ஆமதாபாத் - கேவாடியா ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், 'விஸ்டாடூம்' எனப்படும், கண்ணாடி மேற்கூரை மற்றும் மிகப் பெரிய ஜன்னல்கல் இடம் பெறும். இதனால், ரயில் பயணத்தை ரசிக்க முடியும்.கடந்த காலங்களில், ரயில்வேயில் புதிய தொழில்நுட்பத்துக்கு வாய்ப்பே
தரப்படவில்லை. தற்போது, ரயில் பாதைகள் அமைப்பதில் இருந்து, அனைத்திலும், புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதனால், அதிவேக ரயில்களை இயக்க முடிகிறது.

சென்னையில் இருந்தும் கேவாடியாவுக்கு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு, தமிழக முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அவருடைய பிறந்தநாளில், அவரை நினைவு படுத்த விரும்புகிறேன். அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்பட்டவர் அவர். இவ்வாறு அவர் பேசினார்.


சென்னையில் இருந்து...சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, குஜராத் மாநிலம், கேவாடியாவுக்கு, நேற்று காலை, 11:24க்கு ரயில் போக்குவரத்தை, டில்லியில் இருந்தபடி,
பிரதமர் மோடி கொடியசைத்து துவங்கி வைத்தார்.வழக்கமான ரயில் போக்குவரத்து, கேவாடியாவில் நாளை மறுதினம், காலை, 9:15 மணிக்கு இயக்கப்பட்டு, மறுநாள் மாலை, 4:00 மணிக்கு, சென்னை,எம்.ஜி.ஆர்., சென்ட்ரல்வந்தடையும்.

எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் வரும், 24ம் தேதி இரவு, 10:30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் மாலை, 6:10 மணிக்கு கேவாடியா சென்றடையும். பெரம்பூர், ஆந்திரா மாநிலம், ரேணிகுண்டா உட்பட,
13 ரயில்வே ஸ்டேஷன்களில், இந்த ரயில் நின்று செல்லும்.

சென்னை சென்ட்ரலில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், எம்.ஆர்.விஜய பாஸ்கர், எம்.பி.. நவநீதகிருஷ்ணன், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், கூடுதல் பொது மேலாளர் கே.மல்யா, சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் பி.மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Advertisement
வாசகர் கருத்து (29+ 36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜன-202117:36:50 IST Report Abuse
ஆப்பு ஆப்பிளையும் ஆரஞ்சையும் கம்பேர் பண்ணுகிறாரு.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-ஜன-202113:16:46 IST Report Abuse
Malick Raja கருத்துக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் ..கூவி பயனில்லை கழுதைகளை போல என்பதை வாசகர் தெளிவாக்கி இருப்பது தேச விரோத செயல் என்பதை தெளிவாக்கமே என்று கூட தெரியா அறிவிலிகளை என்ன சொல்வது
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
18-ஜன-202118:14:20 IST Report Abuse
கொக்கி குமாரு என்ன மாலிக் ராசா கதறல் அதிகமா இருக்கு? அதுசரி, சவூதி அரேபியாவில் இளைஞர்கள் வேலை கிடைக்காமல் பிற நாட்டினரின் கார் டயர்களை திருடி விற்கும் செயலில் ஈடுபடுகிறார்களாமே, தவிரவும் சவுதி இளைஞர்கள் குடிப்பதற்கென்றே பஹரைன் நோக்கி படை எடுக்கிறார்களாமே, அதை பற்றி தங்கள் கருத்து என்ன?...
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-ஜன-202112:41:52 IST Report Abuse
Malick Raja அப்புறமென்னா .. மக்கள் சுபிச்சமடைந்துவிடுவார்கள் . என்ன கருணை .. கண்டு பிடிப்பு .. எப்படியெல்லாம் மாற்றுவழிமுறைகளோ என்று எண்ணுவதும் பிறன்றோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X