பொது செய்தி

தமிழ்நாடு

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி; 'ரன்னர்-அப்' பாலாஜி

Updated : ஜன 18, 2021 | Added : ஜன 18, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ் சீசன் 4' நிகழ்ச்சியில், ஆரி டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் இடம் பாலாஜிக்கு கிடைத்தது.விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம், துவங்கிய 'பிக்பாஸ் சீசன் 4' நிகழ்ச்சி, 105 நாட்களாக நடந்து வந்த நிலையில், கடைசி நாளான இன்று(ஜன.,17), 'கிராண்ட் பைனல்' சிறிது நேர தாமதத்துடன் நேரலையாக ஒளிப்பரப்பானது. 16

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ் சீசன் 4' நிகழ்ச்சியில், ஆரி டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் இடம் பாலாஜிக்கு கிடைத்தது.latest tamil newsவிஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம், துவங்கிய 'பிக்பாஸ் சீசன் 4' நிகழ்ச்சி, 105 நாட்களாக நடந்து வந்த நிலையில், கடைசி நாளான இன்று(ஜன.,17), 'கிராண்ட் பைனல்' சிறிது நேர தாமதத்துடன் நேரலையாக ஒளிப்பரப்பானது. 16 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த போட்டியில், ஆரி, பாலாஜி, ரியோ, சோம் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதி போட்டியில் இருந்தனர்.

யார் டைட்டில் வின்னர் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், 5வது இடம் பெற்று சோம், முதலில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரை கடந்த முறை வின்னரான முகின் வீட்டிற்குள் சென்று அழைத்து வந்தார். அடுத்ததாக 4வது இடம் பிடித்த ரம்யா பாண்டியன் வெளியே அனுப்பப்பட்டார். அவரை கவின் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அழைத்து வந்தார். பின் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற நடிகை ஷெரின், 3வது இடம் பெற்ற ரியோவை, பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேறினார்.


latest tamil newsபின் டைட்டில் வின்னர் யார் என்ற எதிர்பார்ப்புடன், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கமல், ஆரியையும், பாலாஜியையும் மேடைக்கு அழைத்து வந்தார். அனைவரும் எதிர்பார்த்தபடி, அதிக ஓட்டுக்கள் பெற்ற ஆரியை, 'பிக்பாஸ் சீசன் 4' டைட்டில் வின்னராக கமல் அறிவித்தார். அவருக்கு 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் கிடைத்துள்ளது. அவருக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பாலாஜிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. அவருக்கு 6 கோடியே 16 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் கிடைத்தன.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - BRAMPTON,கனடா
18-ஜன-202117:44:08 IST Report Abuse
Nathan Big Boss is a worthless program and people in Tamil Nadu have lot of patience to watch this type of insipid, dull and useless programs.
Rate this:
Cancel
K.P SARATHI - chennai,இந்தியா
18-ஜன-202114:14:23 IST Report Abuse
K.P  SARATHI இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசு பணம் எவ்வளவு
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
18-ஜன-202113:45:29 IST Report Abuse
S. Narayanan Kamal sir if you are really support for Tamil people you could have given this prize money for Corona injunction development program.
Rate this:
Sivakumar - Permbalur,கத்தார்
18-ஜன-202114:54:23 IST Report Abuse
Sivakumar do you have any sense, is Kamal sponsoring big boss winner prize, its organized and run by Vijay TV, Kamal is just anchor....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X