ஆண்குழந்தையின் விலை ஒன்றரை லட்சம்; இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஜன 18, 2021 | Added : ஜன 18, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்பஸ் தீப்பற்றி 6 பேர் பலிஜெய்பூர்: ராஜஸ்தானின் நகோடாவில் உள்ள ஜெயின் கோவிலுக்கு, தனியார் பஸ்சில் சென்ற, 40 பேர், சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில், ஜலுார் மாவட்டம் மகேஷ்புராவில் உயர் அழுத்த மின் கம்பியில் உரசிய பஸ்சில், தீப்பற்றியது. இதில் டிரைவர் உட்பட ஆறு பேர், உடல் கருகி பலியாயினர்.பெண் குழந்தை விலை ரூ.60
today, crime, round up, இன்றைய கிரைம், ரவுண்ட் அப், விபத்து, தற்கொலை


இந்திய நிகழ்வுகள்பஸ் தீப்பற்றி 6 பேர் பலி

ஜெய்பூர்: ராஜஸ்தானின் நகோடாவில் உள்ள ஜெயின் கோவிலுக்கு, தனியார் பஸ்சில் சென்ற, 40 பேர், சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில், ஜலுார் மாவட்டம் மகேஷ்புராவில் உயர் அழுத்த மின் கம்பியில் உரசிய பஸ்சில், தீப்பற்றியது. இதில் டிரைவர் உட்பட ஆறு பேர், உடல் கருகி பலியாயினர்.


latest tamil news

பெண் குழந்தை விலை ரூ.60 ஆயிரம்


மஹாராஷ்ட்டிர மாநிலம் மும்பையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 8 பேர் கைது. பெண்குழந்தை விலை 60 ஆயிரம். ஆண் குழந்தை விலை ஒன்றரை லட்சம்.போபாலில் தடை உத்தரவு
போபால்: மத்திய பிரதேசத்தின் போபாலில், ஒரு சமூகத்தினருக்கான குடியிருப்புகள் கட்டுமான பணிக்கு, மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போபாலின் ஹனுமன்கஞ்ச், கவுதம் நகர் உட்பட சில பகுதிகளில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

காங்., தலைவர் மீது தாக்குதல்
அகர்தலா: வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் தலைநகர் அகர்தலாவில், காங்கிரஸ் தலைவர் பிஜுஷ் பிஸ்வாசின் கார் மீது, மர்ம நபர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில் லேசான காயமடைந்த அவர், பா.ஜ., ஆதரவாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். தாக்குதலை கண்டித்து, 12 மணி நேர, 'பந்த்'துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

.பண மோசடி: சீனர்கள் கைதுபுதுடில்லி: நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த சார்லி பெங் என்ற லுவோ சாங், 42 மற்றும் கார்ட்டர் லீ ஆகியோர், போலி நிறுவனங்கள் வாயிலாக, நம் நாட்டில், 1,000 கோடி ரூபாய் வரை பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில், அவர்கள் இருவரையும் அமலாகத்துறை அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்துள்ளனர்.

லஞ்சம் பெற்ற அதிகாரி கைது

புதுடில்லி: இந்திய ரயில்வேயின் பொறியியல் சேவையில் பணியாற்றி வரும் மூத்த அதிகாரி மஹேந்தர் சிங் சவுகான், ரயில் திட்ட ஒப்பந்தங்களை பெற்றுத் தர, 1 கோடி ரூபாய் லஞ்சம் பெற முயன்றபோது, சி.பி.ஐ., அதிகாரிகள், அவரை கைது செய்தனர். லஞ்சமாக பெற்ற பணத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், இந்த வழக்கு தொடர்பாக, டில்லி, அசாம், உத்தரகாண்ட் உள்ளிட்ட, ஐந்து மாநிலங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள், அதிரடிச் சோதனை நடத்தினர்.

ராஜஸ்தானில் 'லவ் ஜிகாத்' புகார்
பிகானிர்: உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில், 'லவ் ஜிகாத்' எனப்படும், கட்டாயப்படுத்தி மணம் முடித்து, மதம் மாற்றும் முறைக்கு எதிராக, சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், ராஜஸ்தானின் பிகானிர் மாவட்டத்தில், முக்தியார் கான், 22, என்ற முஸ்லிம் இளைஞரை, மணிஷ் துதி, 18, என்ற ஹிந்து மதப் பெண், காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு, பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வலுக்கட்டாயமாக, தங்கள் பெண்ணை மணம் முடித்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, மாநிலத்தில், லவ் ஜிகாத் முறைக்கு எதிராக சட்டம் இயற்ற, மத்திய வேளாண் இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி வலியுறுத்தி உள்ளார்.
'தாண்டவ்' தொடருக்கு எதிர்ப்பு
புதுடில்லி: பிரபல, 'பாலிவுட்' நடிகர் சயீப் அலி கான் நடிக்கும், 'தாண்டவ்' என்ற இணைய தள தொடருக்கு தடை விதிக்கக் கோரி, பா.ஜ., தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த தொடர், ஹிந்துக்களின் மத உணர்வை துாண்டும் வகையிலும், தலித் மக்களுக்கு எதிரானதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


தமிழக நிகழ்வுகள்கார் கண்ணாடியை உடைத்து ரூ 2.53 லட்சம் திருட்டு
அபிராமபுரம் : கார் கண்ணாடியை உடைத்து, 2.53 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.மயிலாப்பூரைச் சேர்ந்தவர் அபிதா, 33; கட்டுமான நிறுவனம் நடத்தி வருபவர். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் முன் காரை நிறுத்தி, அவரது நண்பரை பார்க்க சென்றார்.நள்ளிரவு வந்து பார்த்தபோது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டு, பின் இருக்கையிலிருந்த, 2.53 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.அபிராமபுரம் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.

காசிமேட்டில் தீவிபத்து

காசிமேடு : காசிமேடு மீன்பிடி துறைமுகம், படகுகள் கட்டும் தளம் அருகே, பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, கரும்புகை கிளம்பியதால், பரபரப்பு ஏற்பட்டது.


latest tamil newsஅடிமையான கணவர்: மனமுடைந்து பெண் தற்கொலை

சென்னை, மாதவரம், பொன்னியம்மன்மேடு, நேரு தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி; கட்டுமான தொழிலாளி. குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். அவரது மனைவி நீலாவதி. 56. கணவரின் குடி பழக்கத்தால், அவர்களுக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.நேற்று முன்தினம் இரவும், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த நீலாவதி, நேற்று அதிகாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

* மேலூர் அருகே ரேசன் அரிசி கடத்திய இருவர் கைது. வேன் பறிமுதல்.


அ.ம.ம.க செயலர் கைது


* ராமநாதபுரம் நேரு நகரில் 360 கிலோ கஞ்சா பறிமுதல். அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலர் மருதுசேனை, வாசிம் உள்பட 9 பேர் கைது. இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதன் மதிப்பு ரூ.25 லட்சம் .

* மதுரை துரைசாமி நகர் சாலினி தெருவில் ஓய்வு பெற்ற துணை தாசில்தார் ரவிச்சந்திரன் வீட்டில் 65 பவுன் நகை கொள்ளை. எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிறந்தநாள் கொண்டாடிய இளம் பெண் தற்கொலை

குரோம்பேட்டை : குரோம்பேட்டையில், பிறந்த நாள் கொண்டாடிவிட்டு, துாங்க சென்ற இளம்பெண், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரோஷினி, துாக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்.


உலக நிகழ்வுகள்


latest tamil news


சூடானின் தர்பூரில் மலைவாழ் மக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 83 பேர் பலியாகினர். 160 பேர் காயமுற்றனர்.


பெண் நீதிபதிகள் சுட்டுக்கொலை


தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், நேற்று காரில் சென்று கொண்டிருந்த உயர் நீதிமன்ற பெண் நீதிபதிகள் இருவர் மீது, மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் நீதிபதிகள் இருவரும் பலியான நிலையில், காயமடைந்த டிரைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X