பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: தி.மு.க.,விற்கு தகுதி இருக்கிறதா?

Updated : ஜன 18, 2021 | Added : ஜன 18, 2021 | கருத்துகள் (131)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் : வி.பத்ரி, ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'அ.தி.மு.க.,வை நிராகரிப்போம்' என்கிற வாசகத்துடன், தமிழகமெங்கும் மக்கள் சபை என்கிற பெயரில் கூட்டம் போட்டு, பிரசாரம் செய்து வருகிறார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்.அதற்கு அவர் கூறும் காரணம், அ.தி.மு.க.,
ithu ungal idam, இது, உங்கள், இடம்,


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :வி.பத்ரி, ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'அ.தி.மு.க.,வை நிராகரிப்போம்' என்கிற வாசகத்துடன், தமிழகமெங்கும் மக்கள் சபை என்கிற பெயரில் கூட்டம் போட்டு, பிரசாரம் செய்து வருகிறார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்.அதற்கு அவர் கூறும் காரணம், அ.தி.மு.க., ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டதாம். அப்படியென்றால், தி.மு.க. ஆட்சியில் ஊழலே நடக்கவில்லையா? தி.மு.க., தமிழகத்தில் பொற்கால ஆட்சியா நடத்தியது? அப்படியானால் மக்கள் ஏன் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து, தி.மு.க.,வை நிராகரித்து வந்தனர்?அதற்கான காரணத்தை விளக்குவாரா, ஸ்டாலின்?

வலிமையான தலைவராக இருந்த ஜெ.,யின் மரணத்திற்குப் பின், நான்கு ஆண்டுகளாக, அ.தி.மு.க., தலைமையிலான ஆட்சியை தக்க வைத்து, சிறப்பாக செயல்படுகிறார், முதல்வர் இ.பி.எஸ்.,'இந்த ஆட்சி, நாளை கவிழும், மூன்று மாதத்தில் கவிழும்' என எதிர்பார்த்தே, ஸ்டாலின் ஏமாந்து போனார்.இ.பி.எஸ்., தலைமையிலான தமிழக அரசு, மாநிலம் முழுதும் குடிமராமத்து பணியை மேற்கொண்டு, நீர் நிலையை துார் வாரியது; இதனால், நீர் ஆதாரம் பெருகியுள்ளது.மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, தமிழகத்திற்கு வேண்டிய நிதி ஆதாரங்களைப் பெற்று, நிலுவையில் இருந்த பல்வேறு மேம்பாலம், சாலை விரிவாக்கம் போன்ற திட்டப்பணிகளை விரைந்து முடித்தது.அனைத்தையும் விட, தமிழக அரசு, 'கொரோனா'வை சிறப்பாக கையாண்ட விதம், அனைவரது பாராட்டையும் பெற்றது.


latest tamil newsபுயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில், பாதிப்பு ஏற்பட்ட அடுத்த நாளே, முதல்வர் இ.பி.எஸ்., சம்பந்தப்பட்ட பகுதியில், வேட்டியை மடித்துக் கட்டியபடி, களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்கிறார்.நிருபர்களின் கேள்விகளுக்கு, தகுந்த பதில் அளிக்கிறார். அறிக்கை மட்டும் கொடுத்து, தப்பித்து ஓடுவதில்லை.முதல்வர் வேட்பாளருக்கான தகுதியில், ஸ்டாலினை விட, பல மடங்கு மேலானவர், இ.பி.எஸ்., என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement
வாசகர் கருத்து (131)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
19-ஜன-202114:56:48 IST Report Abuse
mathimandhiri இந்த அடிப்படையான உண்மையைப் புரிந்துகொண்டு ஆளும் கூட்டணி வியூகம் அமைத்துச் செயல் பட வேண்டும். மத்தியில் எந்த ஆட்சியாக இருந்தாலும் பரவாயில்லை, தமிழகத்தில் இது தான் நிதர்சனமான உண்மை. இந்த பார்முலாவில் மாற்றமே கிடையாது.
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
19-ஜன-202113:09:33 IST Report Abuse
mathimandhiri எத்தனையோ மக்கள் விரோத இந்து விரோத இமாலய ஊழல்களை புரிந்த கட்சி தான் என்றாலும் ஒரு விஷயத்தை மறந்து வீடாக கூடாது. 1) அந்த இரு சிறுபான்மை ஓட்டுக்குள் எத்தனை சத வீதமோ அத்தனையும் சிந்தாமல் சிதறாமல் தீம்கவுக்குத்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. எதிரணிக்கு அதில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட கிடைக்க வாய்ப்பில்லை. 2) தங்களையே நேர்ந்து விட்ட பரம்பரை கொத்தடிமைகள். அவர்களின் வாக்குகள். இதை தீம்க உணர்ந்துள்ளது. 3) மிச்சமுள்ள ஒட்டுக்குத் தான் பிரச்சாரமெல்லாம். இதில் இளிச்சவாய் இந்துக்கள் ஏமாந்து போனால் முடிவு என்ன என்பதை யாரும் சொல்லத் தேவையில்லை. இப்போது சொல்லுங்கள் யார் கையில் அவர்களின் வெற்றி?
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
19-ஜன-202100:03:10 IST Report Abuse
Nallavan Nallavan திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கிறது .........ஆக ஆக ஆக ஆக ஹிந்துக்கள் (மறைந்த கருணாநிதியின் பாணியில் சொல்வதென்றால் திருடர்கள்) தமிழகத்தை விட்டு வெளியேற தயாராக இருங்கள் ...........
Rate this:
M.Selvam - Chennai/India,இந்தியா
19-ஜன-202114:15:42 IST Report Abuse
M.Selvamமஹா அபத்தமான கருத்து.. தேர்தல் முடிவுகள் என்னவென்றால் அதற்கும் இந்துக்களுக்கும் என்ன பெரிய சம்பந்தம் .. ???முதலில் இந்துக்கள் என்றால் ஒரே மாதிரியான மன ஓட்டமும் ஒரே வகை வாழ்க்கை முறையும் உடயோர் என்று கிடையாது..அந்த ஏற்ற தாழ்வுகளை ஒதுக்கி வைப்பதை சமூக அவலங்களை யாரும் பேசவோ எழுதவோ தயார் இல்லை ..பாஜக வந்து ஊர் ஊராக இந்த தேவையற்ற பாகுபாடுகளை அவர்கள் தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்த ஒரு யுக்தி ...அவ்வளவே..ஊழல் போகப் போவது இல்லை..சாதரண வசதிகளே பெரிய எதிர்பார்ப்பு என்றே நாம் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X