செனட் தலைவராக உள்ளாரா கமலா ஹாரிஸ்?: அமெரிக்க அரசியலில் விவாதம்

Updated : ஜன 18, 2021 | Added : ஜன 18, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
வாஷிங்டன்: வரும் ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார் ஜோ பைடன். துணை அதிபராகப் பதவியேற்க உள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தற்போது பதவியேற்றதும் தாங்கள் செய்யவேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசித்து வருகிறார். முதல் வேலையாக 1.9 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய கொரோனா வைரஸ் நிவாரண மசோதாவை காங்கிரஸிடம் அனுப்பி தாக்கல்செய்ய

வாஷிங்டன்: வரும் ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார் ஜோ பைடன். துணை அதிபராகப் பதவியேற்க உள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தற்போது பதவியேற்றதும் தாங்கள் செய்யவேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசித்து வருகிறார். முதல் வேலையாக 1.9 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய கொரோனா வைரஸ் நிவாரண மசோதாவை காங்கிரஸிடம் அனுப்பி தாக்கல்செய்ய ஆயத்தம் ஆகி உள்ளார் கமலா ஹாரிஸ்.



latest tamil news


அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ராபின் வான்ஆர்க் வெற்றி பெற்றார். இதனால் அமெரிக்க செனட்டில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் ஐம்பதுக்கு ஐம்பது சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளனர். இதனால் இருவருக்குமே சமபலம் உள்ளது. இதன்காரணமாக தற்போது கமலா செனட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் இவரது அதிகாரங்கள் அதிகரிக்கும்.


latest tamil news


கமலா ஹாரிஸுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டால் அதிபருக்கு அடுத்து முக்கிய முடிவுகளை எடுக்க அவரால் முடியும். ஏற்கனவே கமலா ஹாரிஸ் கடந்த நான்கு ஆண்டுகளாக செனட்டில் முக்கிய உறுப்பினராக அங்கம் வகித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜோ பைடனை ஒப்பிடுகையில் கமலா ஹாரிஸ் செனட்டில் அங்கம் வகித்த எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் நட்பு பாராட்ட வில்லை என்பதும் கவனிக்கப்படவேண்டிய விஷயம். இதனால் முக்கியத் தீர்மானங்களை நிறைவேற்றும் சமயத்தில் முரண்பாடுகள் பல ஏற்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,பஹ்ரைன்
18-ஜன-202115:45:45 IST Report Abuse
Raj வாழ்த்துக்கள் அம்மணி
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
18-ஜன-202113:15:30 IST Report Abuse
Ramalingam Shanmugam இந்திய கலாச்சாரத்தை மதிக்காதவர் என்ன எதிர்பார்க்க முடியும்
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-ஜன-202114:15:00 IST Report Abuse
தமிழவேல் யப்பா, அவரு அரசியலில் இருப்பது அமெரிக்காவில.........
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
18-ஜன-202112:33:01 IST Report Abuse
Kalyan Singapore இந்திய அமெரிக்கா தயவில் காலம் தள்ள வேண்டிய நிலையில் தற்போது இல்லை. அதனால் கமலா ஹாரிஸ் க்கு வால் பிடிக்க வேண்டிய அவசியமும் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X