வேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்குகள்: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

Updated : ஜன 18, 2021 | Added : ஜன 18, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: வேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்குகளை, உச்ச நீதிமன்றம் இன்று (ஜன.,18) விசாரிக்க உள்ளது. நீதிமன்றம் நியமித்துள்ள நிபுணர் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு, டிராக்டர் பேரணிக்கு தடை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விசாரணை நடக்க உள்ளது.மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லி எல்லையில் போராட்டத்தில்

புதுடில்லி: வேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்குகளை, உச்ச நீதிமன்றம் இன்று (ஜன.,18) விசாரிக்க உள்ளது. நீதிமன்றம் நியமித்துள்ள நிபுணர் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு, டிராக்டர் பேரணிக்கு தடை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விசாரணை நடக்க உள்ளது.



latest tamil news


மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய சங்க பிரதிநிதிகளுடன், மத்திய அரசு பல சுற்று பேச்சு நடத்தியும், பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்படவில்லை. வேளாண் சட்டங்களை எதிர்த்தும், விவசாயிகள் போராட்டத்தை எதிர்த்தும், உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுஉள்ளன.இவற்றை விசாரித்த, தலைமை நீதிபதி, எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, மூன்று சட்டங்களையும் நிறுத்தி வைக்க சமீபத்தில் உத்தரவிட்டது

.மேலும், பிரச்னை குறித்து ஆராய, நான்கு பேர் அடங்கிய நிபுணர் குழுவையும் நியமித்து உள்ளது.இந்தக் குழுவில் இருந்து விலகுவதாக, முன்னாள், எம்.பி.,யும், பாரதிய கிசான் யூனியனின் தலைவருமான, புபிந்தர் சிங் மான், அறிவித்துள்ளார். அதனால், நிபுணர் குழுவில் புதிய உறுப்பினரை நியமிப்பது குறித்து, உச்ச நீதிமன்ற அமர்வு இன்று விசாரிக்கும்.வரும், 26ல் குடியரசு தினத்தன்று, டில்லியில், டிராக்டர் பேரணி நடத்துவது உட்பட, எந்தப் போராட்டத்தில் ஈடுபடவும் தடை விதிக்கக் கோரி, மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவும், இன்று விசாரிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, முதல் முறையாக, வரும், 19ல், ஆலோசனை நடத்த உள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
18-ஜன-202115:47:11 IST Report Abuse
வெகுளி கலவரக்காரர்களிடம் பேச்சு நடத்த பஞ்சாப் ஹரியானா டெல்லி போலீசிடம் லத்தி ஸ்டாக் இல்லையா?
Rate this:
Cancel
18-ஜன-202110:15:56 IST Report Abuse
ஆரூர் ரங் நாட்டின் மொத்த தானியக் கொள்முதலில் வெறும் 28 விழுக்காடே உள்ள பஞ்சாப் ஹரியானா குறைந்தபட்ச விலைக் கொள்முதலில்( மானியம்) 70 விழுக்காடு பெறுகின்றன. அதனால் அங்கு விவசாய நிலத்தின் விலை ஏக்கர் ஒரு கோடி வரை போகிறது. பத்து சதவீத லாபம் என்றால்கூட ஏக்கருக்கு பத்து லட்சம் வருமானமாவது இருக்க வேண்டுமே. பின ஏன் போராடுகிறார்கள் ?🤑 போலித்தனம்.
Rate this:
Raj - Namakkal,சவுதி அரேபியா
18-ஜன-202111:54:04 IST Report Abuse
Rajஅந்த வருமானம் கார்ப்பரேட்டுகளுக்கு போய்விட கூடாது என்று தான் .......
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
18-ஜன-202107:30:34 IST Report Abuse
a natanasabapathy விவசாய சங்கத்தினர் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட முடியாது என்று கூறிவிட்டனர் பிறகு என்ன தீர்ப்பு வழங்க போகிறார்கள். போராட்டத்தை தடை செய்வதே சரியான முடிவாகும். அடியாத மாடு படியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X