பைடன், கமலா பதவியேற்பு விழாவில் அமெரிக்கவாழ் இந்தியர்களின் கோலங்கள்

Updated : ஜன 18, 2021 | Added : ஜன 18, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
வாஷிங்டன்: ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழாவின் துவக்கத்தில் ஒளிபரப்பபடும் காணொலி காட்சியில், இந்திய வம்சாவளியினர் உருவாக்கி உள்ள பிரமாண்ட கோலங்கள், காட்சிப்படுத்தப்பட உள்ளன.அமெரிக்காவில், கடந்த ஆண்டு இறுதியில் நடந்துமுடிந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், அமோக வெற்றிபெற்றார். அனுமதி மறுப்புஇவரும், துணை அதிபராக

வாஷிங்டன்: ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழாவின் துவக்கத்தில் ஒளிபரப்பபடும் காணொலி காட்சியில், இந்திய வம்சாவளியினர் உருவாக்கி உள்ள பிரமாண்ட கோலங்கள், காட்சிப்படுத்தப்பட உள்ளன.latest tamil newsஅமெரிக்காவில், கடந்த ஆண்டு இறுதியில் நடந்துமுடிந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், அமோக வெற்றிபெற்றார்.


அனுமதி மறுப்பு


இவரும், துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிசும், நாளை மறுநாள், முறைப்படி பதவி ஏற்க உள்ளனர்.பைடன் மற்றும் ஹாரிசை வரவேற்கும் விதமாக, தலைநகர் வாஷிங்டனில், பதவியேற்பு விழா நடக்கவுள்ள, 'கேப்பிடோல்' எனப்படும், அமெரிக்க பார்லிமென்ட் கட்டடத்தின் முகப்பில், 'டைல்ஸ்'களை பயன்படுத்தி, அமெரிக்கவாழ் இந்தியர்கள், பிரமாண்ட கோலங்களை உருவாக்கி உள்ளனர்.

எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக, அவற்றை அங்கு வைக்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.எனவே, 'பதவியேற்பு விழாவின் துவக்கத்தில் ஒளிபரப்பப்படும் காணொலி காட்சியில், இந்த கோலங்கள் காட்சிப்படுத்தப்படும்' என, விழாவின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து, இந்திய வம்சாவளிகள் அமைப்பின் தலைவர் சாந்தி சந்திரசேகர் கூறியதாவது: நேர்மறை ஆற்றலையும், புதிய துவக்கத்தையும், கோலங்கள் குறிக்கும்.


எதிர்பார்ப்பு


எனவே, பதவியேற்கும் விழாவை கொண்டாடும் வகையில், டைல்ஸ்களை வைத்து, பிரமாண்ட கோலங்களை அமைக்க முடிவு செய்தோம்.சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களால், இதற்கான டைல்ஸ்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இவற்றை, பல சமூகங்களை சேர்ந்தோர்; வெவ்வேறு வயதுடையோர் என, அமெரிக்கா முழுதும் இருந்து, 1,800க்கும் அதிகமானோர் இணைந்து உருவாக்கி உள்ளனர்.

சிறிய திட்டமாகவே இதை துவங்கினோம். எனினும், இது, நாங்கள் எதிர்பார்த்ததை விட, பிரமாண்டமாக உருவாகி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


latest tamil news


அமெரிக்காவில், துணை அதிபராக பதவியேற்க இருக்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற இருக்கும், இந்திய வம்சாவளியான கமலா ஹாரிசுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி சோனியா சோடோமேயர், பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். சோடோமேயர், உச்ச நீதிமன்றத்தின் முதல் லத்தீன் பெண் நீதிபதிஆவார். இவர், 2013ல், துணை அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடனுக்கு, முதல்முறையாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
19-ஜன-202106:16:14 IST Report Abuse
Indhuindian This is sheer escapism. Indians who have taken American Citizenship before taking it take a oath that they do not owe allegiance to any other nation. How can they claim the traditions of Indians as "AMERICANS" but can do so only as admirer of Indian Customs. The foreigners who faithfully follow Indian beliefs and sentiments like the members of ISCON are better than these pseudo Indians
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-ஜன-202123:34:00 IST Report Abuse
தமிழவேல் பாராட்டுக்கள்..
Rate this:
Cancel
seshadri - chennai,இந்தியா
18-ஜன-202116:42:55 IST Report Abuse
seshadri Who is this aravon even did not have the courage to mention his real name. What services this bloody sonia did for the country. She did everything for her and her family and prinyankas mother in law for whom crores of rupees and SPG security was given. Sonia was and is the no. 1 culprit for the country's down fall. She made a prime minister who is nothing but a thanjavur bommai and a President lady who is useless for anything and unknown to anybody. Don't talk rubbish.
Rate this:
baygonspray - Aryan,ஈரான்
18-ஜன-202121:23:20 IST Report Abuse
baygonsprayமண் மோகன் ஆட்சியில் தான் பொருளாதாரத்தில் இந்திய முன்னேறியது . இப்போ படுபாதாளத்தில் ....
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
19-ஜன-202111:30:17 IST Report Abuse
ShivRam ShivShyamமன்மோகன் ??? பொருளாதாரம் ?? முன்னேற்றம் ?? யாரு ......
Rate this:
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
19-ஜன-202114:44:58 IST Report Abuse
Rasheelஹவாலா, கள்ள கடத்தல், வரி ஏமாற்று, தங்கம் கடத்துவது போன்றவற்றில் முதலிடம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X