பொது செய்தி

இந்தியா

பார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது

Updated : ஜன 18, 2021 | Added : ஜன 18, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
ஆக்ரா : தாஜ்மஹாலை பார்வையிட வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை, 2019 உடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால், 76 சதவீதம் குறைந்துள்ளது.உத்தர பிரதேசத்தின், ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்று என்பதால், சுற்றுலா பயணியர் அதிக எண்ணிக்கையில் வருகை தருவது வழக்கம். இவர்களில் பெரும்பாலானோர், வெளிநாட்டினர். கொரோனா பாதிப்பால், கடந்த ஆண்டு, உலகின் பல்வேறு
Tajmahal, tourist, தாஜ்மஹால்

ஆக்ரா : தாஜ்மஹாலை பார்வையிட வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை, 2019 உடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால், 76 சதவீதம் குறைந்துள்ளது.

உத்தர பிரதேசத்தின், ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்று என்பதால், சுற்றுலா பயணியர் அதிக எண்ணிக்கையில் வருகை தருவது வழக்கம். இவர்களில் பெரும்பாலானோர், வெளிநாட்டினர். கொரோனா பாதிப்பால், கடந்த ஆண்டு, உலகின் பல்வேறு பகுதிகளும் ஊரடங்கால் முடங்கியது. சர்வதேச விமானங்களும் பல மாதங்கள் நிறுத்தப்பட்டன.


latest tamil news


இது, நம் நாட்டிற்கான சுற்றுலா பயணியரின் வருகையை வெகுவாக குறைத்தது. நாட்டின் ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச், 17 முதல் செப்., 21 வரை தாஜ்மஹால் மூடப்பட்டிருந்தது. இதனால், தாஜ்மஹாலுக்கான சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை, 2019 உடன் ஒப்பிடும் நிலையில், கடந்த ஆண்டு, 76 சதவீதம் குறைந்துள்ளது. இதன்படி, 2019ல், 7.37 லட்சம் வெளிநாட்டு பயணியரும், 48.35 லட்சம் உள்நாட்டு மக்களும் தாஜ்மஹாலை பார்வையிட்டனர்.

கடந்த ஆண்டு தாஜ்மஹாலுக்கு வருகை தந்த வெளிநாட்டு பயணியரின் எண்ணிக்கை, 1.82 லட்சமாகவும், உள்நாட்டு மக்கள், 11.34 லட்சமாகவும் குறைந்துள்ளது என, அதிகாரிகள் கூறியுள்ளனர். சுற்றுலா பயணியரின் வருகை இல்லாததால், அவர்களை நம்பி தொழில் செய்யும் வழிகாட்டிகள் மற்றும் வியாபாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரும், பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
18-ஜன-202120:12:02 IST Report Abuse
தமிழ்வேள் தாஜ்மஹால் என்ன புனிதரின் சமாதியா ? நான்காவது மனைவிக்கு மூன்றாவது கணவன் கட்டிய சமாதி ..இதை காதல் சின்னம் என்று சொன்னவன் சுயபுத்தி அற்றவனாகதான் இருப்பான் ....முறை தவறிய காமத்தின் சின்னம் இந்த தாஜ்மஹால் ..இதையும் ஒரு கட்டிடம் என்று சொல்லி பார்ப்பவனை நினைத்து பரிதாபப்படத்தான் இயலும் ..
Rate this:
Cancel
18-ஜன-202118:48:17 IST Report Abuse
ஆப்பு எல்லோரும் பட்டேல் சிலையைப் பாக்க போயிட்டாங்க.
Rate this:
Cancel
mridangam - madurai,இந்தியா
18-ஜன-202115:15:13 IST Report Abuse
mridangam சமாதி கட்டு.. கோவிலை இடி இது தான் dmk, vc,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X