பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு லேசான பக்கவிளைவு

Updated : ஜன 18, 2021 | Added : ஜன 18, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 447 பேருக்கு லேசாக பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர கால அனுமதியளித்தது. இதனையடுத்து, ஜன.,16ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு
CovidVaccine, 447People, AdverseReactions, Reported, கொரோனா, தடுப்பூசி, இந்தியா, பக்கவிளைவு

புதுடில்லி: கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 447 பேருக்கு லேசாக பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர கால அனுமதியளித்தது. இதனையடுத்து, ஜன.,16ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் 2 லட்சத்து 24 ஆயிரத்து 301 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 16ம் தேதி மட்டும் 2 லட்சத்து 7 ஆயிரத்து 229 பேருக்கும், நேற்று (ஜன.,17) 17 ஆயிரத்து 702 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.


latest tamil news



இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் இதுவரை 447 பேருக்கு லேசான பக்கவிளைவு ஏற்பட்டதாகவும், அதில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை தேவைப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் குமட்டல் ஆகிய பிரச்னைகள் மட்டுமே இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan Kumar - nellai ,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜன-202120:59:22 IST Report Abuse
Saravanan Kumar இந்த ஒவ்வாமை என்பது உலகம் முழுவதும் உள்ளது. இந்தியாவில் தான் அரசியல்வாதிகளால் பெரிது படுத்த படுகிறது. வளைகுடா நாடுகளில் இது போன்ற தேவை இல்லாத கருத்துக்களை கூறினால் உடனடியாக ஜெயிலில் போட்டு விடுவார்கள். இந்தியாவிலும் இது போன்ற கடுமையான சட்டங்களை இயற்றி மக்கள் அமைதியாக வாழ வழி செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
18-ஜன-202119:28:47 IST Report Abuse
TamilArasan எனக்கு சிறுவயதில் பள்ளியில் போட்ட போலியோ தடுப்பூசி ஊசி தழும்பு கைகளில் இன்றும் உள்ளது, மேலும் ஊசி போட்ட அன்று பயங்கர காச்சல் மற்றும் கைகள் வீங்கி உப்பு ஒத்தடம் கொடுத்தார்கள் - தடுப்பூசி போட்டால் காச்சல் தலைவலி வாந்தி போன்றவை இருப்பது இயல்புதான்...
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-ஜன-202115:57:39 IST Report Abuse
ஆரூர் ரங் நூறில் நான்கு பேருக்கு கத்திரிக்காய் கூடத்தான் அலர்ஜி .அதற்காக கத்திரி பயிரை தடை செய்யணுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X