ஆராய்ச்சிக்கூடத்தில் இறைச்சியை உருவாக்கும் தொழில்நுட்பம் கொதிநிலையை அடைந்திருக்கிறது. இஸ்ரேலைச் சேர்ந்த 'அலேப் பார்ம்ஸ்', மாட்டு இறைச்சியின் உயிருள்ள செல்களை மட்டும் எடுத்து, ஆய்வகத்தில் வளர்க்கும், 'பயோ பார்ம்' தொழில்நுட்பத்தை படைத்துள்ளது.
ஒப்பந்தம்இத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நேரடியாகவே மாட்டு இறைச்சியை பெரிய உயிரிக் கலன்களில் வளர்க்க முடியும். அலேப் பார்ம்சின் உயரதிகாரிகள், அண்மையில், ஜப்பானிலுள்ள மிட்சுபிசி குழுமத்தின் உணவுப் பிரிவுடன் கூட்டுறவு ஒப்பந்தம் போட்டுஉள்ளனர்.
இதன் மூலம், மாட்டு இறைச்சிப் பிரியர்களான ஜப்பானியர்களுக்கு விரைவில், ஆய்வகத்தில் வளர்த்த மாட்டிறைச்சி கிடைக்கப்போகிறது.அலேப்பின் 'பயோ பார்ம்' தொழில்நுட்பத்தை வைத்து, மிட்சுபிசி தனது புதிய தொழிற்சாலையில் மாட்டிறைச்சியை உருவாக்கி, ஜப்பான் முழுவதும் விற்பனை செய்யவிருக்கிறது.
ஆய்வக இறைச்சி, அசல் மாட்டிறைச்சியைவிட சற்றே விலை கூடுதலாகவே இருக்கும். சுற்றுச்சூழல் கேடுஆனால், அடுத்த சில ஆண்டுகளில் ஆய்வக இறைச்சியின் விலை இறங்கிவிடும் என அலேப் பார்ம்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், மாட்டுப் பண்ணைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகள் எதுவும் ஆய்வக மாட்டிறைச்சியை உருவாக்கும்போது ஏற்படாது. எனவே, ஜப்பானில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முதலில் அலேப் பார்ம்சின் ஆய்வக மாட்டிறைச்சிக்கு ஆதரவு தருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE