சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

வேகமெடுக்கும் பூமி!

Added : ஜன 18, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
கடந்த 2020 உலகத்தை கலக்கிவிட்டுச் சென்றது. அதே ஆண்டில், இன்னொரு பூமிக் கலக்கலும் நடந்தேறியுள்ளது. அதாவது, பூமி தன்னைத் தானே சுற்றும் வேகம் சற்றே அதிகரித்துள்ளது.அதிகமில்லை, பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்திருப்பது, ஒரே ஒரு நொடி கூடுதல்தான். எனவே, உலக நேரத்தை கணக்கிடும் அணுக் கடிகாரத்தில், ஒரு நொடியை கழித்து ஒடவைக்கவேண்டும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.கடல் அலைகள்,
 வேகமெடுக்கும் பூமி!

கடந்த 2020 உலகத்தை கலக்கிவிட்டுச் சென்றது. அதே ஆண்டில், இன்னொரு பூமிக் கலக்கலும் நடந்தேறியுள்ளது. அதாவது, பூமி தன்னைத் தானே சுற்றும் வேகம் சற்றே அதிகரித்துள்ளது.

அதிகமில்லை, பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்திருப்பது, ஒரே ஒரு நொடி கூடுதல்தான். எனவே, உலக நேரத்தை கணக்கிடும் அணுக் கடிகாரத்தில், ஒரு நொடியை கழித்து ஒடவைக்கவேண்டும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

கடல் அலைகள், காற்று வீசும் வேகம், பூமியின் மையத்தில் அலைபாயும் எரிமலைக் குழம்பு என்று பல காரணிகளால் பூமியின் சுழற்சி வேகம் சற்றே மாறுபடுவதுண்டு. வழக்கமாக, இந்த இயற்கைக் காரணிகளால் வேகம் குறையும். ஆனால், 2020ல் வேகம் சற்றே கூடியுள்ளது என்பதுதான் விந்தை.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.ANBARASAN - muscat,ஓமன்
18-ஜன-202109:07:41 IST Report Abuse
K.ANBARASAN பூமியில் உள்ள கனிமபொருள்களையும் வளங்களையும் நாம் அதன் உள்பகுதியில் இருந்து எடுத்து சுரண்டல் வேலை நடந்து கொண்டு இருப்பதாலும் மிக பெரிய அணைகள் கட்டி நீரின் ஒட்டத்தை தடுத்து நிறுத்தி திசை மாற்றம் செய்வதாலும் குறிப்பாக சீனாவில் சில ஆண்டுகளுக்கு முன் கட்டி முடிக்கப்பட்ட மிக பெரிய அணையினாலும் ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவில் 1980 ல் இருந்த பனித்திட்டுக்கள் (IDENTIFIED THRU PHOTOS BY NASA) தற்போது காணாமல் போயிருப்பதாலும் இது போன்ற அசாதாரண நிகழ்வுகள் இனி சாத்தியமே.
Rate this:
Balaji - Chennai,இந்தியா
18-ஜன-202110:17:12 IST Report Abuse
Balajiஅசாதாரனங்கள் பல பில்லியன் ஆண்டுகளாக நிகழ்பவை. இனி சாத்தியம் என்று கூறுவது அபத்தம்......
Rate this:
K.ANBARASAN - muscat,ஓமன்
18-ஜன-202113:16:27 IST Report Abuse
K.ANBARASAN ஆனால் இருபதாம் நூற்றாண்டிற்கு பின்பு மட்டும் தான் பூமியில் அதிகமாக கனிம வளங்கள் வெட்டியெடுக்க பட்டுள்ளன. அதற்கு முன்பாக மக்கள் இயற்கையை ஒட்டியே தங்கள் வாழ்க்கையை நடத்தி உள்ளனர்.GLOBAL WARMING DEFORESTATION CLIMATE CHANGE எல்லாம் கடந்த நூற்றாண்டில் இருந்து தான் ஆரம்பமாகின நண்பரே....
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
18-ஜன-202115:18:59 IST Report Abuse
Dr. Suriyaநீங்கள் கூறுவது உண்மை இல்லை...இது நிறை மாறா கோட்பாட்டுக்கு எதிரானது....நிறை குறைந்தால் வேகம் அதிகமாகும்... ஆனால் பூமியில் இருந்து எடுக்கும் பொருள்களில் மறுபடியும் பூமியில் தான் இருக்கிறது வேறு வடிவங்களில்......
Rate this:
K.ANBARASAN - muscat,ஓமன்
19-ஜன-202109:14:51 IST Report Abuse
K.ANBARASAN அதாவது பூமியின் உள்ளே உள்ள பொருட்களான இரும்பு க்ரானைட் மற்றும் பல பொருட்களை எடுத்து வெளியே கட்டடங்களாக மாறுகின்றன என்று சொல்கிறீர்களா. இதனால் பூமியின் உள்பகுதி வெற்றிடம் ஆகிறதே அதன் கதி என்ன அல்லது ஏதாவது மண்ணை போட்டு நிரப்பினாலும் முதலில் இருந்த ஒரிஜினல் நிறை கிடைக்குமா . இது building strong basement week என்ற வடிவேலு காமெடி யை நினைவுபடுத்துகிறது ஒரு டன் தங்கம் எடுப்பதற்காக எவ்வளவு மணல் மற்றும் பாறைகளை குடைந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா தவிர பெட்ரோல் மற்றும் அதன் bi products எடுக்கப்பட்டு அது பூமிக்குள் போவதில்லை அது carbon di oxide ஆக மாறி atmosphere ல் தான் கலக்கிறது .இது போல இன்னும் நிறைய கூறலாம்.நிறை மாற கோட்பாடு என்பது சரியே ஆனால் மனிதன் அதன் நிறையை தற்போது குறைத்து கொண்டிருக்கிறான் என்பது தான் நிதர்சனம்...
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
23-ஜன-202114:31:56 IST Report Abuse
Dr. Suriyaஅதனாலத்தான் நிலநடுக்கங்கள் வந்தது அவற்றை தானே பூமி சரி செய்து கொள்கிறது ......
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
23-ஜன-202114:34:25 IST Report Abuse
Dr. Suriyaநீங்கள் சொல்லும் atmosphere பூமிக்குள் அடக்கம் என்பது தெரியாதா? தெரிய வில்லை என்றால் இதை பற்றி நன்றாக தெரிந்த விஞ்ஞானிகளிடம் கேட்டு தெளிவு பெறவும்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X