பொது செய்தி

இந்தியா

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

Updated : ஜன 18, 2021 | Added : ஜன 18, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு வயது 103.இமாச்சல் பிரதேசத்தில் நேற்று (ஜன.,17) நடைபெற்ற முதல்கட்ட உள்ளாட்சித் தோ்தலில் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகி (103) வாக்களித்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்குச் சாவடியில் சிவப்பு கம்பள வரவேற்பு
HimachalPradesh, FirstVoter, India, ShyamSaranNegi, PanchayatPolls, Vote, இமாச்சல் பிரதேசம், சுதந்திர இந்தியா, முதல் வாக்காளர், ஷியாம் சரண் நேகி, உள்ளாட்சி தேர்தல்

சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு வயது 103.

இமாச்சல் பிரதேசத்தில் நேற்று (ஜன.,17) நடைபெற்ற முதல்கட்ட உள்ளாட்சித் தோ்தலில் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகி (103) வாக்களித்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்குச் சாவடியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 1917ம் ஆண்டு ஜூலை 1ல் பிறந்த ஷியாம், 1951-52ல் நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் முதல்நபராக வாக்களித்தார். ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரான ஷியாம், இது குறித்து அவர் கூறியதாவது:


latest tamil news



1952ம் ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவின் முதல் தோ்தல் நடைபெற்றது. மலைப் பகுதிகளில் வானிலை உள்ளிட்ட பிரச்னைகளால் 5 மாதங்கள் முன்னதாக 1951 அக்டோபா் 23ம் தேதியே தோ்தல் நடைபெற்றது. அப்போது, நான் பள்ளி ஆசிரியராக இருந்தேன். தோ்தல் பணியிலும் பங்கேற்றேன்.
எனது வாக்குச்சாவடியான கின்னோரில் உள்ள பள்ளியில் முதல் நபராக காலை 7 மணிக்கு வாக்களித்தேன். இவ்வாறு அவர் கூறினார். அப்போது இருந்து இதுவரை லோக்சபா தோ்தல், சட்டசபைத் தோ்தல், உள்ளாட்சித் தோ்தல் என அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்ததாகவும் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murthy - Bangalore,இந்தியா
18-ஜன-202119:15:38 IST Report Abuse
Murthy அனைவரும் வாக்கு அளிக்கவேண்டும். அனைவரும் வாக்கு அளிப்பதில்லை அதனால் தகுதி இல்லாதவர்கள் தேர்வாகிறார்கள்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
18-ஜன-202112:34:47 IST Report Abuse
Ramesh Sargam முதலில் வாழ்த்துக்கள் இந்த பெரியவருக்கு. தவறாமல் வாக்களித்து வரும் இந்த பெரியவருக்கு, அவரிடம் வாக்குகளைப்பெற்ற அரசியல்வாதிகள் என்ன செய்தனர், எப்படி உதவினார்?
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-ஜன-202111:49:36 IST Report Abuse
Lion Drsekar பாராட்டுக்கள், இங்கு வாக்காளர் பட்டியல் இருந்து பெயர்களை நீக்குகிறார்கள், எல்லாவற்றிக்கும் ஆதாரம் இருக்கிறது, 93 வயது முதியவருக்கு சொந்த வீடும் அவரது பெயரிலேயே இருக்கிறது ஆனால் அவரது பெயரை வாக்காளர் பட்டியல் இருந்து நீக்கியிருக்கிறார்கள், அவர் பல முறை சமீபத்தில் நடந்த பெயர் சேர்க்கும் முகாமுக்கு சென்றும் எதுவும் நடக்கவில்லை, எல்லாவற்றிற்கும் ஆள் இருந்தால் எல்லாமே நடக்கும், வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்
Rate this:
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
18-ஜன-202115:21:41 IST Report Abuse
Sankare Eswarவந்தே மாதரம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X