சென்னை: ரஜினி மக்கள் மன்றத்தினர், ராஜினாமா செய்துவிட்டு எந்த கட்சியிலும் சேரலாம் என ரஜினி மன்ற நிர்வாக சுதாகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்குவதில் இருந்து பின்வாங்கினார். இதனையடுத்து அவரது ரசிகர் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக.,வில் இணைந்தனர். தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் செந்தில் செல்வானந்த், தேனி மாவட்டச் செயலாளர் கணேசன் மற்றும் ரஜினி ரசிகர்கள் நேற்று (ஜன.,17) திமுக.,வில் இணைந்தனர்.

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்ட அறிக்கை: ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்து விடக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE