அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக., திட்டங்களை முடக்கிய அதிமுக அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு

Updated : ஜன 18, 2021 | Added : ஜன 18, 2021 | கருத்துகள் (63)
Share
Advertisement
தருமபுரி: ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், மகளிர் சுயஉதவிக்குழு போன்ற திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை அதிமுக அரசு முடக்கியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.தருமபுரி மாவட்டம் கும்மனூரில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: திருமபுரி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்
DMK, Stalin, ஸ்டாலின், திமுக, அதிமுக, கிராம சபை கூட்டம்

தருமபுரி: ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், மகளிர் சுயஉதவிக்குழு போன்ற திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை அதிமுக அரசு முடக்கியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தருமபுரி மாவட்டம் கும்மனூரில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: திருமபுரி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டுவந்தது திமுக தான். எங்கள் ஆட்சியிலேயே இத்திட்டத்தை 80 சதவீதம் முடித்துள்ளோம். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான நிதியை ஜப்பான் சென்று பெற்று வந்தேன். ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்டத்தை முடக்கிவிட்டது. திமுக மறுபடியும் ஆட்சிக்கு வந்த உடன் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் முழுமைப்படுத்தப்படும்.


latest tamil news



மகளிர் சுயஉதவிக் குழுவை கொண்டுவந்தது கருணாநிதி தான். அதையும் அதிமுக ஆட்சி முடக்கிவிட்டது. தருமபுரி மாவட்டத்திற்கு எந்தவொரு திட்டத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியின்போது இருந்த பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை, தற்போது பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. இன்னும் 4 மாதங்களில் மக்களின் அன்புடனும், ஆதரவுடனும் திமுக ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
18-ஜன-202119:00:51 IST Report Abuse
கொக்கி குமாரு ஹி...ஹி...ஹி...சுடலை என்ன சொல்ல வர்றாருன்னா சென்ற முறை நாங்க ஆட்சிக்கு வந்து நிறைய திட்டங்கள் மூலம் நிறைய ஆட்டைய போடலாம்னு இருந்தோம்.ஆனா அதிமுக ஆட்சிக்கு வந்து எங்களது திட்டத்தை முடக்கிவிட்டது என்கிறார்.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
18-ஜன-202118:37:21 IST Report Abuse
madhavan rajan அப்படியே மேலும் பல உண்மைகளையும் இவர் ஒப்புக்கொள்ளவேண்டும். ஸ்டெர்லிட் ஆலை இவர்கள் ஆட்சியில்தான் தொடங்கியது. ONGC துறப்பணி வேலைக்கு ஒப்புதல் அளித்ததும் இவர்கள்தான். காவிரிப் பிரச்சினைக்கும் காரணம் இவர்கள்தான். மதுக்கடையை முதலில் திறந்ததும் இவர்கள்தான். நீட் தேர்வு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும் இவர்கள் அவர்களோடு ஆட்சியில் இணைந்து இருந்தும் அமைச்சரவைக்கூட்டத்தில் திமுகவின் எந்த அமைச்சரும் எதிர்ப்பு தெரிவிக்காதது. ஜல்லிக்கட்டு நிறுத்தத்திற்கு காரணமான ஜெயராம் ரமேஷின் செயலை எந்த திமுக எம் பி யம் எதிர்க்காமல் இருந்தது. இதுபோன்ற இவர்கள் ஆட்சிக்காலத்தில் நடந்த மேலும் பல சாதனைகளுக்கும் இவர் தந்தை பொறுப்பு என்பதையும் அறிவிக்கவேண்டும். அப்போதுதான் தமிழக மக்களின் அறிவுக்கண் நன்றாக திறக்கும். செய்வாரா?
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
18-ஜன-202118:09:17 IST Report Abuse
siriyaar முதல்ல கூட்டல் வாய்ப்பாடை மனப்பாடம் செய்ய சொல்லுங்க , அஞ்சாங் கிளாஸ் பரிட்சை வந்த கூட சேராத ஆளு ஆனா ஆசை முதல்வராகவேண்டும் என்பது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X