டிராக்டர் பேரணி ; போலீசார் தான் தீர்மானிக்க வேண்டும்; உச்சநீதிமன்றம்

Updated : ஜன 18, 2021 | Added : ஜன 18, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
புதுடில்லி: டிராக்டர் பேரணிக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ‛டில்லிக்குள் யாரை, எத்தனை பேரை அனுமதிக்க வேண்டும் என போலீசார் தான் தீர்மானிக்க வேண்டும்,' என கூறியுள்ளது.மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய சங்க
TractorRally, SC, Delhi, Farmers, RepublicDay, DelhiPolice, NextHearing, Jan20, டிராக்டர், பேரணி, சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம், டில்லி, போலீசார்,

புதுடில்லி: டிராக்டர் பேரணிக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ‛டில்லிக்குள் யாரை, எத்தனை பேரை அனுமதிக்க வேண்டும் என போலீசார் தான் தீர்மானிக்க வேண்டும்,' என கூறியுள்ளது.

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய சங்க பிரதிநிதிகளுடன், மத்திய அரசு பல சுற்று பேச்சு நடத்தியும், பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்படவில்லை.
வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மூன்று சட்டங்களையும் நிறுத்தி வைக்க சமீபத்தில் உத்தரவிட்டது. இந்நிலையில், ஜன.,26ல் குடியரசு தினத்தில் டில்லியில் டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்தன.


latest tamil news



குடியரசு தினத்தன்று, டில்லியில் டிராக்டர் பேரணி நடத்துவது உட்பட, எந்தப் போராட்டத்தில் ஈடுபடவும் தடை விதிக்கக் கோரி, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், விவசாயிகள் பேரணி என்பது சட்டம் ஒழுங்கு சார்ந்தது.
‛டில்லிக்குள் யாரை அனுமதிக்க வேண்டும், எத்தனை பேரை அனுமதிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முதல் அதிகாரம் டில்லி போலீசுக்கு உள்ளது. இதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது,' எனக்கூறி பேரணி தொடர்பான மனு மீதான விசாரணையை வரும் 20ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan - Bengaluru,இந்தியா
18-ஜன-202121:28:28 IST Report Abuse
Krishnan இதுநாள்வரை விவசாயிகளின் போராட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கவில்லை. எப்பொழுது உச்ச நீதிமன்றம் தனது நடுநிலைமை தீர்ப்பை வழங்கவேண்டுமோ அப்பொழுது தட்டிக்கழிக்கிறது. விவசாயிகள் போராட்டத்தால் இயல்பான வாழ்க்கை தடை பட்டிருக்கிறது. இதனால் வன்முறை வெடிக்க சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஜன-202100:09:31 IST Report Abuse
தமிழவேல் அன்று விடுமுறை என்பதால் இயல்பான வாழ்க்கை தடைபடாது என்று நம்புவோம் ......
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
18-ஜன-202120:43:43 IST Report Abuse
தமிழ்வேள் டெல்லி போலீஸ் மத்திய அரசின் கீழ் இயங்குவது ...பெயருக்கு நான்கு அல்லது பத்து டிராக்டர்களுக்கு அனுமதி தருவார்கள் ..மீதிப்பயல்கள் தெனாவட்டாக உள்ளே நுழையப்போக உதை வலுவாக கிடைக்கப்போகிறது ..
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
18-ஜன-202120:39:21 IST Report Abuse
Rajagopal டெல்லியில டிராக்டர் ஓட்டினா ஒண்ணும் வெளையாது. போயி ஒங்க வயல்ல ஓட்டுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X