ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு புதிய கொரோனா நோயாளி: அதிரும் இங்கிலாந்து

Updated : ஜன 18, 2021 | Added : ஜன 18, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
லண்டன்: இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு புதிய கொரோனா நோயாளி அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவல் உலகெங்கிலும் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கான தடுப்பூசிகளும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தியாவில் கடந்த 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு
CoronaVirus, UK, England, Covid-19, கொரோனா, வைரஸ், இங்கிலாந்து, பாதிப்பு

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு புதிய கொரோனா நோயாளி அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் உலகெங்கிலும் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கான தடுப்பூசிகளும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தியாவில் கடந்த 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாம் பரவல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு இதுவரை 33,95,959 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 89,243 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news


இந்நிலையில், கொரோனா வைரஸின் புதிய திரிபும் அங்கிருந்து தான் உலக நாடுகளுக்கு பரவ தொடங்கியது. இது அனைத்தும் சேர்ந்து அந்நாட்டு அரசிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்நாட்டின் தேசிய சுகாதார சேவையின் இங்கிலாந்து தலைமை நிர்வாகி சர் சைமன் ஸ்டீவன்ஸ் கூறுகையில், "இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனைகளில் ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு கொரோனா நோயாளி அனுமதிக்கப்படுகிறார். இதனால், மருத்துவமனைகள் மற்றும் ஊழியர்கள் கடும் அழுத்தத்தில் உள்ளனர்." என்று தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
19-ஜன-202100:37:18 IST Report Abuse
தல புராணம் அவங்க உண்மையை ஒத்துக்குறாங்க.. மோசடி தர்பார் பொய்யைத் தவிர வேற எதுவும் பேசுறதில்லைன்னு சத்தியம் பண்ணியிருக்காங்க.. அவ்வளவு தான் வித்தியாசம்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
18-ஜன-202119:41:52 IST Report Abuse
S. Narayanan Give Corona injunction fast to all patients.
Rate this:
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
18-ஜன-202119:39:49 IST Report Abuse
mrsethuraman  கரோனா வந்தவர்களுக்கு தடுப்பூசி போடலாமா ? அதனால் பயன் உண்டா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X