சிந்து : பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் வசிப்பவர்கள் தனி நாடு வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. அதோடு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களின் போட்டோக்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராடினர்.
உலகின் மிகவும் பிரபலமான, தொன்மையான நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகம். இதன் பிறப்பிடமாக இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை தழுவி பரவி விரிந்து கிடந்தது. காலப்போக்கில் ஏற்பட்ட பல மாற்றங்களில் பல இன்று சுவடே தெரியாமல் அழிந்துவிட்டது. இருப்பினும் சிந்து மாகாணத்தில் பலர் இன்னும் அந்த தொன்மையை பாதுகாக்கின்றனர். இதனிடையே பாகிஸ்தானின் சிந்து மாகாண மக்கள், 1967 முதல் 'சிந்துதேஷ்' என்ற தனிநாடு கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.
இதை முதன்முதலாக ஜி.எம்.சையத் மற்றும் பிர் அலி முகமது ராஷ்டி ஆகிய சிந்து மாகாண தலைவர்களால் எழுப்பப்பட்டது. நேற்று(ஜன., 17) ஜி.எம் சையத்தின் 117வது பிறந்தநாள். இதையொட்டி அந்த மாகாணத்தில் தனி நாடு வேண்டிய மிகப்பெரிய பேரணி நடந்தது. இதில் பங்கேற்ற பலரும் எங்களுக்கு பாகிஸ்தான் வேண்டாம், தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கோஷமிட்டு சென்றனர்.

பேரணியில் ஹைலைட்டாக பிரதமர் மோடி, அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கும் ஜோ பைடன் உள்ளிட்ட பல உலக நாட்டு தலைவர்களின் போட்டோக்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்று கோஷமிட்டனர். தங்களுக்கு தனி நாடு உருவாக உலக தலைவர்கள் உதவ வேண்டும் என கோஷமிட்டனர். இந்த விஷயம் டுவிட்டரில் இன்று(ஜன., 18) டிரெண்ட் ஆனது.
''அங்குள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உலக நாட்டு தலைவர்கள் ஒன்றிணைந்து பாகிஸ்தானின் பிடியிலிருந்து சிந்து மாகாணத்தை விடுவிக்க வேண்டும்'', ''எங்களுக்கு பாகிஸ்தானும் வேண்டாம், சீனாவும் வேண்டாம். சிந்துகேஷ் மட்டுமே வேண்டும். ஜெய் சிந்து சுதந்திர இயக்கம்'', என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #Sindh, #Pakistan ஆகிய ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE