சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் போட்டி: மம்தா அறிவிப்பு

Updated : ஜன 18, 2021 | Added : ஜன 18, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
கோல்கட்டா: வரும் சட்டசபைத் தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் விலகி சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.மேற்குவங்கத்தில் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான
Mamata, WestBengal, Nandigram, மம்தா, மேற்குவங்கம், நந்திகிராம், தொகுதி, போட்டி, சட்டசபை, தேர்தல்

கோல்கட்டா: வரும் சட்டசபைத் தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் விலகி சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., மற்றும் பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மம்தாவின் அமைச்சரவையில் முக்கிய இடம் வகித்த சுவேந்து அதிகாரி, சில எம்எல்ஏ.,க்களுடன் சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தார். இது மம்தாவிற்கு மிகப்பெரிய இழப்பு என கூறப்பட்டது. இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் சுவேந்து அதிகாரியின் தொகுதியான நந்திகிராமில் தான் போட்டியிட உள்ளதாக மம்தா அறிவித்துள்ளார்.


latest tamil news



நந்திகிராமில் இன்று முதல்வர் மம்தா பானர்ஜி பேரணி நடத்தினார். அந்தப் பேரணியில் மம்தா பானர்ஜி பேசியதாவது: திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள், இங்கு பதவி சுகம் அனுபவித்தவர்கள், வேறு கட்சிக்குச் சென்றால், நான் கவலைப்படமாட்டேன். அவர்களால், இந்த கட்சி உருவாக்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் கொள்ளையடித்த தங்களிடம் இருக்கும் பணத்தையும், சொத்துகளையும் பாதுகாக்கவே இதுபோன்று கட்சி மாறுகிறார்கள்.

நான் எப்போதுமே என்னுடைய சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை நந்திகிராமில் இருந்துதான் துவங்குவேன். இது எனக்கு அதிர்ஷ்டமான இடம். இந்த முறை, நான் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடலாம் என நினைக்கிறேன். இந்தத் தொகுதிக்கு எனது பெயரைப் பரிந்துரைக்குமாறு கட்சியின் மாநிலத் தலைவர் சுப்ரதா பக்ஸியைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இது சாத்தியமாக இருந்தால், நான் பவானிபூர் மற்றும் நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுவேன்.


latest tamil news



பா.ஜ.,விடம் மேற்கு வங்கத்தை விற்பதற்கு சிலர் முயல்கிறார்கள். அதை மட்டும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். என் கடைசி மூச்சு இருக்கும் வரை, பா.ஜ.,வுக்கு என்னுடைய மாநிலத்தை விற்கவிட மாட்டேன். என் கட்சியை விட்டு விலகியவர்களுக்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார். சில ஆண்டுகளுக்கு முன், நந்திகிராமில் தனியார் கார் தொழிற்சாலை அமைக்க மக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம்தான் மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையில் ஆட்சி அமரக் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) தேசத்துரோகி மும்தா பேகம் தெரிந்தே ஆப்பில் அமர்கிறார் தோல்வியின் உச்சக்கட்டம்
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
19-ஜன-202113:20:26 IST Report Abuse
ShivRam ShivShyam சும்மா ஸ்டண்ட். முதல்ல நந்திக்ராம் னு சொல்லிட்டு அப்புறம் ரெண்டு தொகுதில போட்டி போடும்னு உளரும் போது புரியல தைரியம் இருந்தா நந்திக்ராம்ல மட்டும் நிக்கட்டும் பாக்கலாம் சுவேண்டு ஆப்பு வெச்சிருவார்
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
19-ஜன-202113:18:25 IST Report Abuse
ShivRam ShivShyam //பா.ஜ.,விடம் மேற்கு வங்கத்தை விற்பதற்கு சிலர் முயல்கிறார்கள்// - அவர்களாவது பாஜ விடம் தான் விற்க முயல்கிறார்கள் .. நீங்க மேற்கு வங்கத்தை பங்களாதேஷுக்கே வித்துட்டீங்களே ..இப்போ மீட்பு படலமே நடக்கிறது இந்தியாவில் மீண்டும் இணைக்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X