மஹாராஷ்டிராவிற்கு ஒரு இன்ஞ் நிலத்தை கூட விட்டு தரமுடியாது

Updated : ஜன 18, 2021 | Added : ஜன 18, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடகாவிலிருந்து ஒரு இன்ஞ் நிலத்தை கூட மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு விட்டு தரமாட்டோம் என பா.ஜ. முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.கர்நாடகா மாநிலத்தில் பெலகாவி, கார்வார், பீதர், நிப்பானி உள்ளிட்ட சிலபகுதிகளில் மாராத்தி மொழி பேசும் மக்கள் பெருமளவு வசிக்கின்றனர். இப்பகுதி தங்களுடையது எனவும் இப்பகுதிகளை, மஹாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என மஹாராஷ்டிரா
 Border battle between Maharashtra, Karnataka intensifies, Yediyurappa says won't give an inch

பெங்களூரு: கர்நாடகாவிலிருந்து ஒரு இன்ஞ் நிலத்தை கூட மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு விட்டு தரமாட்டோம் என பா.ஜ. முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

கர்நாடகா மாநிலத்தில் பெலகாவி, கார்வார், பீதர், நிப்பானி உள்ளிட்ட சிலபகுதிகளில் மாராத்தி மொழி பேசும் மக்கள் பெருமளவு வசிக்கின்றனர். இப்பகுதி தங்களுடையது எனவும் இப்பகுதிகளை, மஹாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என மஹாராஷ்டிரா ஆளும் சிவசேனா கட்சி முதல்வர் உத்தவ் சமீபத்தில் தெரிவித்தார்.


latest tamil newsஉத்தவ் பேச்சிற்கு கர்நாடகா பா.ஜ.,முதல்வர் எடியூரப்பா மட்டுமின்றி, எதிர்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எங்கள் மாநிலத்தில் உள்ள பகுதிகளை மஹாராஷ்டிரா ஆக்கிரமிக்க நினைத்தால் ரத்த ஆறு ஓடும் என கர்நாடக அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடகா பா.ஜ. முதல்வர் எடியூரப்பா இன்று அளித்த பேட்டியில், எங்கள் மாநிலத்திலிருந்து ஒரு இன்ஞ் நிலத்தை கூட உத்தவ் தாக்கரேயால் எடுக்க முடியாது. எடுக்கவும் விடமாட்டோம். இந்த விவகாரத்தில் உத்தவ் தாக்கரே கூட்டாட்சி முறைக்கு மதிப்பளித்து தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றார்.

காங். கட்சியின் சித்தராமையா கூறியது, பெலகாவி கர்நாடகாவிற்கே சொந்தம் இதனை இழக்க ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் என்றார்.

இந்த விவகாரம் தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில் கர்நாடகா, மஹாராஷ்டிரா எல்லையில் பதற்றம் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
19-ஜன-202115:34:57 IST Report Abuse
Loganathan Kuttuva This problem was severe in Maharashtra around in74 .Udupi hotels in Maharashtra were attacked by Shivasena.
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
19-ஜன-202112:07:14 IST Report Abuse
ponssasi மும்பை தாராவியில் தமிழ் பேசும் மக்கள் அதிகம், தாராவி பகுதியை தமிழ்நாட்டோடு இணைக்கலாம். வளைகுடா நாடுகளில் மலையாளம் தமிழ் பேசும் மக்கள் அங்கு அதிகம் எண்ணெய்வளம் அதிகம் உள்ள பகுதிகளை கேரளா மற்றும் தமிழகத்தில் இணைக்க மோடி அவர்கள் வளைகுடா நாட்டின் இளவரசரிடம் பேச இன்று திரு எடப்பாடி அவர்கள் பிரதமரை சந்திக்கிறார். சுபம் போட்டு இந்தியாவை முடிக்காம உடமாட்டானுவ போலிருக்கே
Rate this:
Cancel
19-ஜன-202111:29:51 IST Report Abuse
ஆப்பு பாத்துங்க... கர்னாடகா எல்லையில் மகாராஷ்டிர ஆளுங்க ஊடுருவி குடிசை போட்டிரப் போறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X