அருணாச்சலில் ஊடுருவி புதிய கிராமத்தை உருவாக்கியுள்ளதா சீனா?

Updated : ஜன 18, 2021 | Added : ஜன 18, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
புதுடில்லி: அருணாச்சல பிரதேசதத்தில் நம் எல்லைக்குள் உட்பட்ட 4.5 கி.மீ. பகுதியில் புதிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்துக்கு உட்பட்ட பகன்சிரி மாவட்டத்தின் சாரிசூ ஏரிக்கரை பகுதி பல ஆண்டுகளாக இந்தியா -சீனா இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ளது.இங்கு நம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 4.5 கி.மீ.
 Exclusive: China Has Built Village In Arunachal, Show Satellite Images

புதுடில்லி: அருணாச்சல பிரதேசதத்தில் நம் எல்லைக்குள் உட்பட்ட 4.5 கி.மீ. பகுதியில் புதிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்துக்கு உட்பட்ட பகன்சிரி மாவட்டத்தின் சாரிசூ ஏரிக்கரை பகுதி பல ஆண்டுகளாக இந்தியா -சீனா இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ளது.இங்கு நம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 4.5 கி.மீ. தொலைவுக்கு சீன ராணுவம் புதிதாக கிராமத்தை உருவாக்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.


latest tamil news100-க்கும் மேற்பட்ட வீடுகளுடன் கூடிய இந்த கிராமத்தின் செயற்கை கோள் புகைபடத்தை கடந்த ஆண்டு தனியார் டி.வி. வெளியிட்டது. இந்த செயற்கைகோள் புகைபடத்தை பாதுகாப்புத்துறை சார்ந்த பல்வேறு நிபுணர்களும் தற்போது உறுதி செய்துள்ளனர்.

கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் இதே இடத்தில் எடுக்கப்பட்ட புகைபடத்தில் புதிய ஆக்கிரமிப்பு எதுவும் தென்படவில்லை. கடந்த ஆண்டு நவம்பரில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் புதிய கிராமம் உருவாகி இருப்பதை நிபுணர்கள் உறுதி செய்தனர். இது நமக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தும் என அவர்கள் கவலை தெரிவித்தனர்.அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பா.ஜ., எம்.பி., தபிர் கவோ சீன ஆக்கிரமிப்பை உறுதி செய்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramu - Birmingham,யுனைடெட் கிங்டம்
20-ஜன-202123:04:06 IST Report Abuse
Ramu அந்த ஊரு பா.ஜா MP மற்றும் லோக்கல் MLA, மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் மீது சந்தேகம் வருகிறது. இந்த கிராமம் கட்டி முடிக்கும் வரை யாரும் பார்க்கவே இல்லையா?
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
19-ஜன-202120:01:43 IST Report Abuse
mathimandhiri அந்த "கிராமக் "குடிசைக்குள் சாதா உடையில் சீன இராணுவமே ஊடுருவியுள்ளது என்பதை சொல்லவே தேவை இல்லை. உடனடியாக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு துரத்த வேண்டும். கண்ணிவெடிகளும் புதைத்திருப்பான். அதையும் கணக்கில் எடுத்துக்க கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
19-ஜன-202114:05:35 IST Report Abuse
pattikkaattaan பப்பு தான் ரகசியமா சீனாக்காரன்கிட்ட பேசி இங்கவந்து வீடுகட்ட சொல்லியிருக்கார் .. காங்கிரஸ் சதி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X