கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொது இடங்களில் சிலைகள்: அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

Updated : ஜன 18, 2021 | Added : ஜன 18, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
மதுரை : மாநிலம் முழுதும் பொது இடங்கள், வருவாய்த் துறைக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள சிலைகள் மற்றும் கட்டுமானங்கள் அகற்றப்படுவதை, தமிழக அரசு உறுதி செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தஞ்சாவூரைச் சேர்ந்த, வைரசேகர் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் சாலைகள் மற்றும் பொது இடங்களில், தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சில சிலைகளை,
 பொது இடங்களில், சிலைகள்,  அகற்ற, உயர் நீதிமன்றம், உத்தரவு

மதுரை : மாநிலம் முழுதும் பொது இடங்கள், வருவாய்த் துறைக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள சிலைகள் மற்றும் கட்டுமானங்கள் அகற்றப்படுவதை, தமிழக அரசு உறுதி செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
தஞ்சாவூரைச் சேர்ந்த, வைரசேகர் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் சாலைகள் மற்றும் பொது இடங்களில், தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சில சிலைகளை, அனுமதி பெற்றும், சிலவற்றை, அனுமதி இன்றியும் வைத்துள்ளனர். அத்தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாளில் கட்சிகள், அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மாலை அணிவிக்கின்றனர்.


latest tamil newsஅப்போது, போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமப்படுகின்றனர். சிலைகளை யாராவது சேதப்படுத்தினால், சமூக ஒற்றுமை பாதிக்கிறது. சில இடங்களில், சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டியது, அரசின் கடமை. தமிழகத்தில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றவும், அனுமதி பெற்ற சிலைகளின் அருகிலுள்ள ஏணிகளை அகற்றவும், தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு, மனு செய்தார். தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு உத்தரவு:மாநிலம் முழுதும் பொது இடங்கள், வருவாய்த் துறைக்கு சொந்தமான இடங்களில் அரசியல், மத ரீதியான அடையாளங்களுடன், அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள சிலைகள் மற்றும் கட்டுமானங்கள் அகற்றப்படுவதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
19-ஜன-202101:14:20 IST Report Abuse
வெகுளி இப்படி ஓசிச்சோரின் அடிமடியில் கை வைத்துவிட்டீர்களே .... நன்றி... நன்றி...
Rate this:
Cancel
19-ஜன-202100:54:21 IST Report Abuse
சம்பத் குமார் 1). Dont quarrel with any body.2). At last Supreme court and and God is there.3). No status in public place.4).Very Good Judgment.5). We all love them the Judge.6). No fighting with statue now onwards.7). We now became has friends. Thanks.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
19-ஜன-202100:48:22 IST Report Abuse
தல புராணம் இப்படி பொத்தாம் பொதுவா சொன்னா எப்புடி? கடற்கரை பொது இடம் தானே.? அதை மயானமாக்கி பொதைச்சிருக்குறதை எல்லாம் அங்கே இருந்து அள்ளிட்டு போக ஆர்டர் போடும் பாப்போம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X