ஜன., 19, 2011
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள ஆட்சிப்பாக்கம் எனும் சிற்றுாரில், 1934 ஜூலை 1ம் தேதி பிறந்தவர், தாமரைக்கண்ணன்; இயற்பெயர், வீ.ராசமாணிக்கம்.சென்னைப் பல்கலையில், தமிழில் முதுகலை; அண்ணாமலைப் பல்கலையில், எம்.எட்., மற்றும் பாண்டிச்சேரிப் பல்கலையில் முனைவர் பட்டங்கள் பெற்றார். 1965 முதல், 1991 வரை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.சிறுகதை, நாவல், நாடகம், வரலாறு, கல்வெட்டு ஆய்வு, குழந்தை இலக்கியம் என, 52 நுால்கள் எழுதியுள்ளார்.'எழில், அன்பெழிலன், கண்ணன், யாரோ, அம்சா, ஜனநாதன், பாஞ்சாலி மகன், அச்சிறுக்கத்தார், அகரத்தான்' போன்ற புனைப் பெயர்களிலும் எழுதி வந்தார்.எழுத்தாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், நுால் மதிப்புரையாளர், பட்டிமன்ற பேச்சாளர், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் என, பன்முகம் உடையவர்.
கடந்த, 2011 ஜன., 19ம் தேதி, தன், 77வது வயதில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். எழுத்தாளர் தாமரைக்கண்ணன் காலமான தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE