'கொள்கை பிடிக்காவிட்டால் 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்தாதீங்க'

Updated : ஜன 20, 2021 | Added : ஜன 18, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி :'சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்' ஒரு தனியாருக்கு சொந்தமானது. அதன் நிபந்தனைகள் உங்களுக்கு பிடிக்காவிட்டால், அதை பயன்படுத்தாமல் தவிர்க்கவும்' என, டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், வாட்ஸ் ஆப் சமூக வலைதளம், சமீபத்தில் தன் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான, 'பிரைவசி' கொள்கையில் மாற்றம் செய்வதாக அறிவித்தது.
கொள்கை, வாட்ஸ் ஆப், டில்லி உயர்நீதிமன்றம், டில்லி ஐகோர்ட் உயர்நீதிமன்றம், ஐகோர்ட்

புதுடில்லி :'சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்' ஒரு தனியாருக்கு சொந்தமானது. அதன் நிபந்தனைகள் உங்களுக்கு பிடிக்காவிட்டால், அதை பயன்படுத்தாமல் தவிர்க்கவும்' என, டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், வாட்ஸ் ஆப் சமூக வலைதளம், சமீபத்தில் தன் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான, 'பிரைவசி' கொள்கையில் மாற்றம் செய்வதாக அறிவித்தது. அதன்படி, 'பயனாளர்களின் தகவல்கள், தாய் நிறுவனமான, 'பேஸ்புக்' உடன் பகிர்ந்து கொள்ளப்படும்' என, அறிவிக்கப்பட்டது. கடும் எதிர்ப்பு எழுந்ததால், இந்த கொள்கையை ஏற்பதற்கான காலக்கெடுவை, பிப்., 8ல் இருந்து, மே, 15ம் தேதிக்கு, அந்த நிறுவனம் ஒத்தி வைத்தது.

இந்தப் பிரச்னை தொடர்பாக, டில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதை விசாரித்த, உயர் நீதிமன்றம் கூறியுள்ளதாவது:வாட்ஸ் ஆப், ஒரு தனியார் சமூக வலைதளம். அதன் கொள்கைகளை ஏற்பது, தனிப்பட்ட நபரின் விருப்பத்துக்கு ஏற்றது. நீங்கள் அதை ஏற்காவிட்டால், அதை பயன்படுத்த வேண்டாம்; வேறு சமூக வலைதளத்தை
பயன்படுத்துங்கள்.சமூக வலைதளங்களின் நிபந்தனைகளை பெரும்பாலும் யாரும் படிப்பதில்லை. அதைப் படித்தால், உங்களுடைய எந்தெந்த தகவல்களை, அவர்கள் பயன்படுத்த நீங்கள் அனுமதித்துள்ளீர்கள் என்பதை அறிந்து ஆச்சரியப்படுவீர்கள். 'கூகுள் மேப்' சமூக வலைதளமும், உங்கள் மொபைல் போன்களில் உள்ள தகவல்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறது. இந்த விவகாரம் மிகவும் சிக்கலானது; விரிவாக இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.இவ்வாறு உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. வழக்கின் விசாரணை, 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul Narayanan - Hyderabad,இந்தியா
19-ஜன-202121:07:53 IST Report Abuse
Arul Narayanan Government's may follow the loss route of BSNL. Is it okay?
Rate this:
Cancel
navasathishkumar - MADURAI,இந்தியா
19-ஜன-202113:56:45 IST Report Abuse
navasathishkumar வாட்ஸ் அப்பில் மட்டுமா ப்ரைவசி இல்லை எந்த ப்ரவுசரில் இருக்கு? அதை சொல்லுங்க... ஜி மெயில் தான் இன்னைக்கு ஈஸி அதில் என்னப்பா ப்ரைவசி பார்த்திருக்கீங்களா? இவ்வள்வு ஏன் நகை கடன் தர்ற வங்கி போடும் கண்டீசன்ஸை என்னைக்காவது படிச்சு பார்த்து கடன் வாங்கினோமா...டெய்லி மாத்திரை போடறப்ப சைட்எபெக்ட்ஸ் வருதே எம்புட்டு என தெரியுமா உங்களுக்கு? எல்லாம் தெரிந்தால் எதையும் அனுபவிக்க முடியாது...நாம் பயன்படுத்தும் பல ஆப் நம்மை பின் தொடர்கிறது.. நமது விலாசங்களை விற்று பிழைக்கிறது.. ஓசியில் அனுபவிக்க நீங்கள் நினைத்தால் இது தான் பலன் . ஒரு ஆப்பை அப்லோட் பண்ண குகிள் ப்ளே ஸ்டோர் எவ்வள்வு பணம் கேட்கும் தெரியுமா.. அதை எப்படி அந்த ஆப் டெவலப்பர் எடுப்பார்.. எல்லாம் டேட்டா பிசினஸ் தான்... இதில் என்ன அந்தரங்கம் வேண்டி கிடக்கு.. நாம் தான் ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும். தேவையற்ற பொருட்கள் இடம் அடைப்பது போல நீங்கள் அன் இன்ஸ்டால் பண்ணுங்கள்.. டேட்டாக்களை அனுப்பியதும் டெலிட் அடித்து விடுங்கள். வாட்ஸ் அப், பேமெண்ட் ஆப், ஷாப்பிங் ஆப் எல்லாம் டேட்டா இல்லாமல் வாழ முடியாது. தெரிஞ்சே செய்தால் அது நம் தவறு.
Rate this:
Cancel
Ganesh G - Hyderabad,இந்தியா
19-ஜன-202112:23:36 IST Report Abuse
Ganesh G நாட்டில் வேறு பிரச்சனைகளே இல்லையா? வாட்ஸ்ஆப் தான் முக்கியப் பிரச்சனையா? போய் புள்ளகுட்டிங்களை படிச்சு பெரியாளக்கிற வழியப் பாருங்கடா? கொலை வழக்கு திருட்டு வழக்குகள் லட்சோபலட்சம் விசாரிக்காமல் இருக்கிறது. 2ஜி வழக்கு இன்னும் அப்படியே இருக்கிறது. இன்னும் எத்தனையோ பாலியல் வழக்குகள் வாய்தாவிலே உள்ளது. ஏர்சல் மேக்ஸிஸ் வழக்கு பசிக்கு ஜாமின் கொடுத்ததுடன் அங்கேயே நிற்கிறது. இந்த வாட்ஸ்ஆப் வழக்குத்தான் ரொம்ப முக்கியம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X