27 நகரங்களில் 'மெட்ரோ' சேவை : பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

Updated : ஜன 20, 2021 | Added : ஜன 18, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
ஆமதாபாத் :'நாடு முழுதும், 27 நகரங்களில், 1,000 கி.மீ., தொலைவுக்கான, 'மெட்ரோ' ரயில் சேவை அமைக்கும் பணிகள் நடக்கின்றன' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.குஜராத்தின், ஆமதாபாத் மற்றும் சூரத் நகரில், 'மெட்ரோ' ரயில் சேவை பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று பங்கேற்றார். தொடர்புஅப்போது, அவர்
மெட்ரோ சேவை, பிரதமர் நரேந்திர மோடி, பெருமிதம்

ஆமதாபாத் :'நாடு முழுதும், 27 நகரங்களில், 1,000 கி.மீ., தொலைவுக்கான, 'மெட்ரோ' ரயில் சேவை அமைக்கும் பணிகள் நடக்கின்றன' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

குஜராத்தின், ஆமதாபாத் மற்றும் சூரத் நகரில், 'மெட்ரோ' ரயில் சேவை பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று பங்கேற்றார்.


தொடர்பு



அப்போது, அவர் பேசியதாவது:மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை உருவாக்குவதில், முந்தைய ஆட்சி காலத்தில், நவீன சிந்தனைகள் இல்லை. எனவே தான், ஒவ்வொரு நகரங்களிலும், வெவ்வேறு விதமான மெட்ரோ ரயில் சேவைகள் உள்ளன. இதர போக்குவரத்து சேவைகளுடன், மெட்ரோ சேவைகள் தொடர்பின்றி தனியாக உள்ளன.தற்போது உருவாக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்தும், பஸ் மற்றும் இதர ரயில் சேவைகளுடன் தொடர்புள்ளதாக உருவாக்கப்படுகிறது.


வேகம்



கடந்த, 2014க்கு முன், 10 - 12 ஆண்டுகளில், நாடு முழுதும், 225 கி.மீ., தொலைவுக்கான மெட்ரோ ரயில் சேவை மட்டுமே பயன்பாட்டுக்கு வந்துள்ளன.கடந்த ஆறு ஆண்டுகளில், புதிதாக, 450 கி.மீ., தொலைவுக்கான மெட்ரோ சேவைகள் துவங்கப்பட்டுள்ளன.தற்போது, 27 நகரங்களில், 1,000 கி.மீ., தொலைவுக்கான மெட்ரோ ரயில் சேவை அமைக்கும் பணிகள் வேகமாக நடக்கின்றன. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
19-ஜன-202121:53:56 IST Report Abuse
தஞ்சை மன்னர் இவர் இன்னும் குஜராத் முதலைச்சர் நினைவாகவே இருக்கார் இந்தியாவில் இன்னும் பல மாநிலங்கள் இருப்பதை இவருக்கு நினைவூட்ட வேண்டும் பல முக்கிய திட்டங்கள் அனைத்தயும் குஜராத்துக்கே திருப்பி விட்டு கொண்டு இருக்கார் இதை யாருக்கும் புரியுதா இல்லையா என்று தெரியவில்லை பெரிய பெரிய வாங்கி மோசடியில் பின்னணியில் இருப்பது குஜராத் பணிய கூட்டம் இருக்குக்கின்றது, பிரதமர் வேடமிட்ட குஜராத் முதல்வர் இவர்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
19-ஜன-202115:20:33 IST Report Abuse
Bhaskaran Chennaiku metro rayil varuvatharku Anraya thimuka arasu thaan muyarchi kal eduthathu enbathu thaan unmai
Rate this:
Cancel
19-ஜன-202110:45:40 IST Report Abuse
ஆப்பு நேரு காலத்துல மெட்ரோ ரயிலே கொண்டு வராம நாட்டுக்கு துரோகம் இழைத்து விட்டார்.
Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
19-ஜன-202118:04:47 IST Report Abuse
elakkumananஐ நா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பதவியை கூட, மோடி அவர்கள் நேரு காலத்துக்கே டைம் மெஷினில் போயி சீனாவுக்கு கொடுத்துவிட்டு வந்துட்டார் ...அதையும் சேர்த்து சொல்லுங்க......நல்லா சொல்றாங்க டீடைலு.......நண்பா, இந்த மோடி ஒழிக மன வியாதிக்கு மருந்தே இல்லயாம் நண்பா.... கவனமா இருங்க......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X