அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கவுன்ட் டவுண் ஸ்டார்ட்' : கணக்கு சொல்லும் ஸ்டாலின்

Updated : ஜன 20, 2021 | Added : ஜன 18, 2021 | கருத்துகள் (53+ 63)
Share
Advertisement
ஓமலுார் : ''தமிழக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இன்னும் நான்கே மாதங்களில், தி.மு.க., ஆட்சி மலரும்,'' என, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசினார்.சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் மக்கள் சபை கூட்டத்தில் பங்கேற்க, தர்மபுரியில் இருந்து, நேற்று மதியம் சேலம் வந்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, தீவட்டிப்பட்டியில், தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர். அங்கு அவர் பேசியதாவது:
கவுன்ட் டவுண், ஸ்டார்ட், கணக்கு, ஸ்டாலின்,மு.க.ஸ்டாலின், திமுக, தி.மு.க., திமுக தலைவர் ஸ்டாலின், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

ஓமலுார் : ''தமிழக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இன்னும் நான்கே மாதங்களில், தி.மு.க., ஆட்சி மலரும்,'' என, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசினார்.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் மக்கள் சபை கூட்டத்தில் பங்கேற்க, தர்மபுரியில் இருந்து, நேற்று மதியம் சேலம் வந்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, தீவட்டிப்பட்டியில், தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர்.

அங்கு அவர் பேசியதாவது: மக்களின் வரவேற்பை பார்த்தால், இன்னும் நான்கு மாதங்களில், தி.மு.க., ஆட்சி நிச்சயம் மலரும். இ.பி.எஸ்., ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவுள்ளது. தமிழகத்தில், ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. தமிழகம் முழுதும் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது. அதற்கு தடை வாங்கினர். தற்போது, மக்கள் சபை கூட்டம் நடத்தப்படுகிறது. அதை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், ஏதேதோ கலவரத்தை துவக்கி, அதன் மூலம் தடுத்து நிறுத்தி விடலாம் என திட்டமிட்டு, சதி செய்து வருகின்றனர்.

எத்தனை தடைகள் வந்தாலும், அந்த தடைகளை உடைத்து எறியக் கூடியவர்கள் நாங்கள். நான்கு மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். தி.மு.க., ஆட்சி மலரப்போவது உறுதி.
இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, சேலத்தில் நடந்த விழாவில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர், ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க., வில் இணைந்தனர்.
முன்னதாக, தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் நடந்த மக்கள் சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில், ஜெயலலிதா ஆட்சியில் வராத, 'நீட்' தேர்வு, இ.பி.எஸ்., காலத்தில் தான் அமல்படுத்தப்பட்டது. இதனால், 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


ஜெயலலிதா உயிரோடு இல்லாததால், சொத்துக் குவிப்பு வழக்கு தண்டனையில் இருந்து தப்பித்தார். சிறைக்கு செல்ல இருந்த, சசிகலாவின் காலில் விழுந்த காரணத்தால் தான், இ.பி.எஸ்., முதல்வர் ஆனார். படிப்படியாக, அவர் முதல்வர் ஆகவில்லை. ஊர்ந்து சென்றதால் தான், முதல்வர் ஆனார்.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்களுக்கு, தண்டனை வாங்கித் தருவேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (53+ 63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
20-ஜன-202114:23:48 IST Report Abuse
Narayanan Stalin keeps on saying that please wait for four months than DMK will come to power. What is mean by this? What will happen. He don't know maths, science, history than how can be the CM ??
Rate this:
Cancel
Venramani Iyer - chennai,இந்தியா
19-ஜன-202120:27:58 IST Report Abuse
Venramani Iyer சுடலை அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்
Rate this:
Cancel
P Ravindran - Chennai,இந்தியா
19-ஜன-202118:53:38 IST Report Abuse
P Ravindran காங்கிரஸ் காலில் விழுந்து கச்சத்தீவை தாரைவார்த்து ஊழல் வழக்கிலிருந்து தப்பித்தது உங்கள் தந்தை. நீங்க மறக்கலாம் மக்கள் மறக்கமாட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X