ஜோ பைடன் உயிருக்கு ஆபத்து? கண்காணிப்பில் பாதுகாப்பு வீரர்கள்

Updated : ஜன 18, 2021 | Added : ஜன 18, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், நாளை பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் சமீபத்தில், 'கேப்பிடோல்' எனப்படும் பார்லிமென்ட் கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.'பதவியேற்பு விழா நடக்கும் நாளில் அல்லது அதற்கு முன், டிரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடலாம்' என,
ஜோ பைடன், உயிருக்கு, ஆபத்து?, கண்காணிப்பில், பாதுகாப்பு, வீரர்கள்

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், நாளை பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் சமீபத்தில், 'கேப்பிடோல்' எனப்படும் பார்லிமென்ட் கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.'பதவியேற்பு விழா நடக்கும் நாளில் அல்லது அதற்கு முன், டிரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடலாம்' என, அமெரிக்காவின் உளவு அமைப்பான, எப்.பி.ஐ., எச்சரித்துள்ளது. அதனால், வழக்கத்தைவிட அதிக அளவு வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


latest tamil news




இந்நிலையில், 'பாதுகாப்புப் படையைச் சேர்ந்த, டிரம்பின் ஆதரவாளர்கள் சிலரால், அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்' என, தகவல் பரவியுள்ளது. அதனால், ராணுவ அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, ராணுவ அமைச்சர் ரயான் மெக்காத்தி, மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள, 25 ஆயிரம், 'நேஷனல் கார்ட்' எனப்படும் அதிரடிப் படையினர் குறித்த தகவல்களை ஆராய, எப்.பி.ஐ.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - A Proud Sanghi,இந்தியா
19-ஜன-202109:15:11 IST Report Abuse
வல்வில் ஓரி ஈ வி எம் இல்லாததால் வந்த வினை..
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
19-ஜன-202106:41:21 IST Report Abuse
 N.Purushothaman இதெல்லாம் ஓவர் சீனு.. இடது சாரி ஆதரவாளர்களை இடது சாரி பயங்கரவாதிகளால் கொல்ல பட வாய்ப்பு உள்ளது .. பைடனல்லாம் அவிங்க கொள்கை கொண்ட பயகங்கரவாதிகள்கிட்ட தான் சூதானமா இருக்கோணும்
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
19-ஜன-202106:12:01 IST Report Abuse
Sanny டிரம்ப்இன் ஆதரவாளர்களைவிட வேறு சில சக்திகள் பைடன் உயிருக்கு உலைவைக்க காத்திருக்கிறார்கள் என்று நம்பலாம். வேறு ஒருவரை ஜனாதிபதியாக்க முயச்சி செய்யலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X