கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொது இடங்களில் சிலைகள் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

Updated : ஜன 20, 2021 | Added : ஜன 18, 2021 | கருத்துகள் (16+ 32)
Share
Advertisement
மதுரை : மாநிலம் முழுதும் பொது இடங்கள், வருவாய்த் துறைக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள சிலைகள் மற்றும் கட்டுமானங்கள் அகற்றப்படுவதை, தமிழக அரசு உறுதி செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தஞ்சாவூரைச் சேர்ந்த, வைரசேகர் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் சாலைகள் மற்றும் பொது இடங்களில், தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சில சிலைகளை,
பொது இடங்கள், சிலைகள்,  உயர் நீதிமன்றம், உத்தரவு

மதுரை : மாநிலம் முழுதும் பொது இடங்கள், வருவாய்த் துறைக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள சிலைகள் மற்றும் கட்டுமானங்கள் அகற்றப்படுவதை, தமிழக அரசு உறுதி செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

தஞ்சாவூரைச் சேர்ந்த, வைரசேகர் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் சாலைகள் மற்றும் பொது இடங்களில், தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சில சிலைகளை, அனுமதி பெற்றும், சிலவற்றை, அனுமதி இன்றியும் வைத்துள்ளனர். அத்தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாளில் கட்சிகள், அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மாலை அணிவிக்கின்றனர்.அப்போது, போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமப்படுகின்றனர். சிலைகளை யாராவது சேதப்படுத்தினால், சமூக ஒற்றுமை பாதிக்கிறது. சில இடங்களில், சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டியது, அரசின் கடமை. தமிழகத்தில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றவும், அனுமதி பெற்ற சிலைகளின் அருகிலுள்ள ஏணிகளை அகற்றவும், தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனு செய்தார்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு உத்தரவு:மாநிலம் முழுதும் பொது இடங்கள், வருவாய்த் துறைக்கு சொந்தமான இடங்களில் அரசியல், மத ரீதியான அடையாளங்களுடன், அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள சிலைகள் மற்றும் கட்டுமானங்கள் அகற்றப்படுவதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (16+ 32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rengaraj - Madurai,இந்தியா
20-ஜன-202111:14:16 IST Report Abuse
Rengaraj கண்டிப்பாக சிலை என்ற ஒன்று தேவை என்றால் அதை அந்த முக்கிய மனிதருக்காக அமைக்கப்பட்ட, அல்லது இனிமேல் ஏதாவது ஓர் இடத்தில் அவருக்காக அமைக்கப்படும் நினைவிடத்தில் அல்லது அரசு வளாகங்களில் நிறுவலாம்.
Rate this:
Cancel
19-ஜன-202121:14:44 IST Report Abuse
ஆரூர் ரங் வாழ்நாளிலேயே சிறைக்கம்பியைப் பார்த்திராத தலைவர்கள்🙃 சிலையானபின் கூண்டுக்குள் அடைபடுவதுதான்😉 வேடிக்கை
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
19-ஜன-202117:46:11 IST Report Abuse
Ram இந்த தலைவர்களின் சிலையில் மக்களுக்கு ஒரு புண்ணாகும் இல்லை , தேவையில்லாமல் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுகிறது ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X