அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழ் புத்தாண்டை மாற்றக்கூடாது: தி.மு.க.,வுக்கு கார்த்தி எதிர்ப்பு

Updated : ஜன 20, 2021 | Added : ஜன 19, 2021 | கருத்துகள் (45)
Share
Advertisement
கீழச்சிவல்பட்டி: ''எங்கள்கூட்டணிக் கட்சியான தி.மு.க.,தமிழ் புத்தாண்டை மாற்றுவோம் என கூறுவதை ஏற்க முடியாது. பகுத்தறிவு பேசுவோர் மனு தாக்கல், விசேஷங்கள் நடத்தும் முகூர்த்த நாட்கள் ரோமானிய காலண்டரிலா உள்ளன, நமது பஞ்சாங்கத்தில்தானே உள்ளன' என்று சிவகங்கை காங்., எம்.பி., கார்த்திகூறினார்.சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் ஒன்றியம் கீழச்சிவல்பட்டியில் தமிழர் மன்றம்
தமிழ் புத்தாண்டு, தி.மு.க., காங்., எம்.பி., கார்த்தி, கார்த்தி சிதம்பரம்,  எதிர்ப்பு

கீழச்சிவல்பட்டி: ''எங்கள்கூட்டணிக் கட்சியான தி.மு.க.,தமிழ் புத்தாண்டை மாற்றுவோம் என கூறுவதை ஏற்க முடியாது. பகுத்தறிவு பேசுவோர் மனு தாக்கல், விசேஷங்கள் நடத்தும் முகூர்த்த நாட்கள் ரோமானிய காலண்டரிலா உள்ளன, நமது பஞ்சாங்கத்தில்தானே உள்ளன' என்று சிவகங்கை காங்., எம்.பி., கார்த்திகூறினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் ஒன்றியம் கீழச்சிவல்பட்டியில் தமிழர் மன்றம் சார்பில் நடந்த பொங்கல் விழாவில் அவர் பேசியதாவது: நம்பிக்கை என்பது ஒருவருக்கொருவர் மாறுபட்டிருக்கும். அடுத்தவர் நம்பிக்கையை நாம் கொச்சைப்படுத்தக் கூடாது. இன்றைய அரசியல் சூழலில் மாற்றுக் கருத்துக் கூறினால் கொச்சைப்படுத்துவதும், கேவலமாக விமர்சிப்பதும், ஏன்தேச துரோகி என்றும்கூட கூறி விடுகிறார்கள்.


எனக்கு கடவுள் நம்பிக்கை, பழக்க வழக்கங்களில் நாட்டம் உண்டு. எங்கள் கூட்டணி கட்சியான தி.மு.க., தை ஒன்றை தமிழ் புத்தாண்டு என்கிறது. அதை நான் ஏற்க முடியாது.கூட்டணிக் கட்சி கூறும் அனைத்துக் கருத்துக்களையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.


ஆங்கில புத்தாண்டு எப்போது



ஜனவரி முதல் தேதி ஆங்கிலப்புத்தாண்டே கிடையாது. அது ரோமானிய ஆண்டு தான். கிறிஸ்து பிறப்பதற்கு 50 ஆண்டுக்கு முன் ஜூலியஸ் சீஸர் உருவாக்கிய காலண்டர். ரோமானியக் கடவுள் பெயரில் தான் ஜனவரி மாதம் உள்ளது. வான சாஸ்திரப்படி, லத்தீன் காலண்டர் அடிப்படையில் ஏப்ரலில் தான் அவர்களின் புத்தாண்டு. பஞ்சாங்கத்தின் அடிப்படையில் தமிழ் புத்தாண்டான சித்திரை முதல் தேதிக்கும் லத்தீன் காலண்டருக்கும் 14 நாட்கள் தான் வேறுபாடு.சூரியன் நகர்வின்படி, அறிவியல்படி சித்திரை ஒன்று தான் நமக்கு புது வருடம். எனக்கு தெரிந்த இந்த விளக்கத்தை அளித்ததற்கு தான் 'எனக்கு பகுத்தறிவு கிடையாது, கூட்டணிக்கு துரோகம் செய்கிறேன், திராவிடக் கலாசாரத்திற்கு விரோதமானவன்....'.என்று விமர்சனம் செய்கிறார்கள்.


முகூர்த்த நாட்கள்


பல அரசியல் கட்சி நண்பர்களின் விசேஷங்களுக்கு சென்றுள்ளேன். எல்லோரும் நமது பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நல்ல நாள், நேரம் குறித்து தான் செய்கின்றனர். கடவுள் இல்லை, பகுத்தறிவு என்பவர்கள் முகூர்த்த நாளில், நல்ல நேரத்தில் தானே தேர்தலுக்கு மனுச் செய்கின்றனர்.நம்பிக்கையிருந்தாலும், இல்லாவிட்டாலும் எல்லா மதத்தையும் ஏற்பது தான்மதச்சார்பின்மை.மாற்றுக் கருத்து கூற சுதந்திரம் கிடையாதா. என்னுடைய நம்பிக்கையை கூறுகிறேன். மற்றவர்கள் மீது திணிக்கவில்லை. இவை பற்றி விவாதிக்க நான் தயார், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Swaminathan - Edison, New Jersy,யூ.எஸ்.ஏ
20-ஜன-202123:57:01 IST Report Abuse
Sridhar Swaminathan கார்த்தி உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். உங்கள் மீது ஊழல் புகார் இருக்கலாம். அடு வேறு, இது வேறு. உங்க அப்பாவிடமும் சொல்லுங்க, திமுக வுக்கு ரொம்ப பரிந்துரைக்க வேண்டாம் என்று.
Rate this:
Cancel
Indianதமிழன் - chennai,இந்தியா
19-ஜன-202123:36:53 IST Report Abuse
Indianதமிழன் அந்த ஆளுதான் புரியாம பேசுறார் என்றால் நீங்களும் ஏன் குழம்புறீங்க.......தமிழ் நாடு அரசாங்கம் பின்பற்றக்கூடியது திருவள்ளுவர் நாட்காட்டி ...அதில் புத்தாண்டு திருவள்ளுவர் தினம் என்பது தவிர தீபாவளி, பொங்கல், தை பூசம், கார்த்திகை போன்ற வேறு எந்த பண்டிகையையும் அதை உருவாக்கிய மறைமலை அடிகள் முதலானோர் சேர்க்கவில்லை..அதற்கென்று தனி மாதத்தின் பெயர் போன்ற நாட்காட்டிக்கு உரிய எந்த குணாம்சமும் கிடையாது. ஏற்கனவே இருக்கும் தமிழ் இந்து நாட்காட்டி மாதங்களின் பெயரை கடன் வாங்கி திருவள்ளுவர் நாட்காட்டிக்கும் வைத்துவிடடார்கள். இதற்கும் நாம் பின்பற்றும் தமிழ் நாட்காட்டிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது ..யாரவது அவருக்கு எடுத்துத் சொல்லுங்க....
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
19-ஜன-202122:50:16 IST Report Abuse
sankaseshan கார்திக் கூட அப்பப்போ நல்லத்தனமாசிந்திக்கிறார் ஆனால் அவங்க அப்பாவை நம்பமுடியாது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X