பொது செய்தி

தமிழ்நாடு

இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு

Updated : ஜன 19, 2021 | Added : ஜன 19, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நாளை இறுதி வாக்காளர் பட்டியல், வெளியிடப்பட உள்ளது.தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவ., 16ல் துவக்கப்பட்டது. அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று முதல், டிச., 15 வரை, வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, நேரடியாகவும், 'ஆன்லைன்' வழியாகவும்,


சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நாளை இறுதி வாக்காளர் பட்டியல், வெளியிடப்பட உள்ளது.



latest tamil news



தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவ., 16ல் துவக்கப்பட்டது. அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று முதல், டிச., 15 வரை, வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, நேரடியாகவும், 'ஆன்லைன்' வழியாகவும், விண்ணப்பங்கள் பெறப்பட்டன.நவம்பர், டிசம்பரில் தலா, இரண்டு நாட்கள், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. ஒரு மாதம் நடந்த, வாக்காளர் திருத்தப் பணியின்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 20.99 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


latest tamil news



பெயர் நீக்கம் கோரி, 4.43 லட்சம்; திருத்தம் கோரி, 3.36 லட்சம்; முகவரி மாற்றம் கோரி; 1.88 லட்சம் விண்ணப்பங்கள் என, ஒட்டுமொத்தமாக, 30.68 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இவற்றை பரிசீலித்து, தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி, டிச., 15 முதல் நடந்து வந்தது. தற்போது, பணிகள் முடிந்துள்ள நிலையில், நாளை அனைத்து மாவட்டங்களிலும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CHINTHATHIRAI - TUTICORIN,இந்தியா
19-ஜன-202122:58:14 IST Report Abuse
CHINTHATHIRAI முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய அணைத்து மக்களும் ஒன்றிணைந்து வாக்குகள் அளித்தால் தமிழகம் சிறக்கும் . சத்து இல்லாத முதல் அமைச்சர் தேவையே இல்லை . எங்கும் ஊழல் எதிலும் ஊழல் .நிறைய சாட்சிகள் இருக்கு
Rate this:
Cancel
karuppasamy - chennai,இந்தியா
19-ஜன-202111:59:49 IST Report Abuse
karuppasamy எலக்ஷன் நேரத்தில் பத்து வருடத்துக்கு முன்னாடி எடுத்த லிஸ்ட்தான் பஞ்சாயத்தில் கொடுப்பார்கள் , அதில் பாதி பேர் பெயரே இருக்காது, புது லிஸ்டை கிடப்பில் போட்டுவிடுவார்கள் .இன்றைய இளைஞர்கள் ஒட்டு போடமுடியாத நிலைமைக்கு தள்ளப்படுவார்கள் . , இதுதான் அரசியல் ஊழல் . கமல் மற்றும் சீமான் அவர்கள் உசாறாக இருங்கள் .
Rate this:
CHINTHATHIRAI - TUTICORIN,இந்தியா
20-ஜன-202122:03:24 IST Report Abuse
CHINTHATHIRAIவருந்துகிரேன் நண்பரே .சரியாக சமர்ப்பித்தல் பதிவு செய்து விடுகின்றனர் ....
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
19-ஜன-202110:17:57 IST Report Abuse
ShivRam ShivShyam அரசு ஆசிரியர்கள் ஜாக்டோ அதிமுக சார்பு போதித்து மக்களை நீக்கி இருப்பர் .. திமுக சார்பு ஆந்திர தெலங்கான கேரளா மக்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பர் .. தெரிந்த விஷயம தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X