இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு

Updated : ஜன 19, 2021 | Added : ஜன 19, 2021 | கருத்துகள் (6)
Share
சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நாளை இறுதி வாக்காளர் பட்டியல், வெளியிடப்பட உள்ளது.தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவ., 16ல் துவக்கப்பட்டது. அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று முதல், டிச., 15 வரை, வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, நேரடியாகவும், 'ஆன்லைன்' வழியாகவும்,


சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நாளை இறுதி வாக்காளர் பட்டியல், வெளியிடப்பட உள்ளது.



latest tamil news



தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவ., 16ல் துவக்கப்பட்டது. அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று முதல், டிச., 15 வரை, வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, நேரடியாகவும், 'ஆன்லைன்' வழியாகவும், விண்ணப்பங்கள் பெறப்பட்டன.நவம்பர், டிசம்பரில் தலா, இரண்டு நாட்கள், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. ஒரு மாதம் நடந்த, வாக்காளர் திருத்தப் பணியின்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 20.99 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


latest tamil news



பெயர் நீக்கம் கோரி, 4.43 லட்சம்; திருத்தம் கோரி, 3.36 லட்சம்; முகவரி மாற்றம் கோரி; 1.88 லட்சம் விண்ணப்பங்கள் என, ஒட்டுமொத்தமாக, 30.68 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இவற்றை பரிசீலித்து, தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி, டிச., 15 முதல் நடந்து வந்தது. தற்போது, பணிகள் முடிந்துள்ள நிலையில், நாளை அனைத்து மாவட்டங்களிலும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X