பொது செய்தி

தமிழ்நாடு

நகை கடன் ரத்து; வதந்தி என்கிறது வங்கி

Updated : ஜன 19, 2021 | Added : ஜன 19, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
சென்னை : கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் ரத்து செய்யப்பட இருப்பதாக அரசியல் கட்சியினர் வதந்தி பரப்பி வருகின்றனர்.கூட்டுறவு துறையின் கீழ் மாநில தலைமை கூட்டுறவு வங்கி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. அவை பயிர் கடன் தங்க நகை அடமான கடன் மகளிர் சுய உதவி குழு கடன் போன்றவற்றை வழங்கி வருகின்றன. அவற்றில் மற்ற வங்கிகள்
Gold Loan, Bank, rumor, நகை கடன், ரத்து, வதந்தி, வங்கி

சென்னை : கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் ரத்து செய்யப்பட இருப்பதாக அரசியல் கட்சியினர் வதந்தி பரப்பி வருகின்றனர்.

கூட்டுறவு துறையின் கீழ் மாநில தலைமை கூட்டுறவு வங்கி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. அவை பயிர் கடன் தங்க நகை அடமான கடன் மகளிர் சுய உதவி குழு கடன் போன்றவற்றை வழங்கி வருகின்றன. அவற்றில் மற்ற வங்கிகள் நிதி நிறுவனங்களை விட நகை கடனுக்கு குறைந்த வட்டி வசூலிக்கப்படுகிறது. இதனால் பலரும் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வாங்குகின்றனர்.

இந்நிலையில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள நகை கடன்கள் ரத்து செய்யப்பட இருப்பதாக கட்சிகள் வதந்தி பரப்பி வருகின்றன.


latest tamil news


கூட்டுறவு வங்கி உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான 'நபார்டு' மற்றும் பொது மக்களிடம் இருந்து திரட்டப்படும் 'டிபாசிட்' ஆகியவற்றை நிதி ஆதராமாக கொண்டு கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. தங்க நகைகளை அடமானம் வைத்து ஓராண்டாகியும் மீட்காமலும் அதற்கான வட்டி அசல் தொகை செலுத்தாமலும் உள்ளனர். அவர்களை தொடர்பு கொண்டு வட்டி செலுத்தி நகை கடனை புதுப்பித்து கொள்ளுமாறு சொன்னால் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நகை கடன் ரத்து செய்யப்பட இருப்பதாக கூறுகின்றனர்.

நகை கடன் ரத்து தொடர்பாக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. சில கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் பயிர் கடன், நகை கடன் ரத்து செய்வதாக வாக்குறுதி அளிக்கின்றன. எனவே கடன் ரத்து குறித்த தவறான தகவல்களை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜன-202118:32:59 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இவனுங்க தேர்தல்ல ஜெயிக்க எல்லா தில்லாலங்கடி வேலையும் செய்வார்கள் , முக்கியமாக இந்துக்களை ஏமாற்ற கடன் தள்ளுபடி என்கிற ஆயுதத்தை எடுப்பார்கள் . இந்த செய்தியை அணைத்து பத்திரிகைகளும் பிரசுரிக்க வேண்டும். கடன் தள்ளுபடி இனி நடக்காது.
Rate this:
Cancel
P RAMESH KUMAR - balasore,இந்தியா
19-ஜன-202115:57:28 IST Report Abuse
P RAMESH KUMAR இதையே மோடி சொல்லிருந்தா அப்பாடி இன்னேரேம் எவ்ளோ பெரிய விஷயமா ஆயிருக்கும் முதல இந்த மோடி மஸ்தான் வேலைய நிறுத்துங்க
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஜன-202115:29:57 IST Report Abuse
தமிழவேல் இதை நம்பி, இன்னைக்கே இருக்குற நகையையும் வச்சி கடனை வாங்குனா....... தேர்தல் முடிஞ்சி, ஆட்சிக்கு வந்து, கடனை ரத்து பண்றதுக்குள்ள, நகை வட்டியிலேயே மூழ்கிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X