பொது செய்தி

இந்தியா

ஓ... அது தான், உங்கள் மீது, தி.மு.க., தலைவருக்கு இவ்வளவு காட்டமா...

Updated : ஜன 19, 2021 | Added : ஜன 19, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
தி.மு.க.,வை ஆட்சியில் அமர விடாமல், 10 ஆண்டுகளாக நாங்கள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த கோபத்தில் தான், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், என்னைப் பற்றி அவதுாறு பரப்பி வருகிறார். அதுபற்றி, நாங்கள் கவலைப்படவில்லை.- அமைச்சர் வேலுமணி'ஓ... அது தான், உங்கள் மீது, தி.மு.க., தலைவருக்கு இவ்வளவு காட்டமா...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி
அமைச்சர் வேலுமணி, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாநில செயலர் பாலகிருஷ்ணன், ம.தி.மு.க., வைகோ, அமைச்சர் விஜயபாஸ்கர்

தி.மு.க.,வை ஆட்சியில் அமர விடாமல், 10 ஆண்டுகளாக நாங்கள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த கோபத்தில் தான், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், என்னைப் பற்றி அவதுாறு பரப்பி வருகிறார். அதுபற்றி, நாங்கள் கவலைப்படவில்லை.
- அமைச்சர் வேலுமணி


'ஓ... அது தான், உங்கள் மீது, தி.மு.க., தலைவருக்கு இவ்வளவு காட்டமா...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி பேச்சு.மத்திய, மாநில அரசுகள் வழங்கும் கொரோனா தடுப்பூசி மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக, டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் முதலில் இந்த ஊசிகளை போட்டுக் கொள்ள வேண்டும்.
- மாநில அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் செந்தில்


'மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. தடுப்பூசிகளை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் சில, பிற நிறுவன தயாரிப்புகள் குறித்து, பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக கேள்வி...' என, சொல்லத் தோன்றும் வகையில், மாநில அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் செந்தில் அறிக்கை.தமிழகத்தில், மனுதர்ம ஆட்சியை கொண்டு வர சிலர் முயற்சிக்கின்றனர். அதை தடுக்க, குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பான எதிர்காலத்தை கருதி, தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும்.
- திராவிடர் கழகத் தலைவர் வீரமணி


'நீங்கள் கூறும் கட்சி, ஆட்சிக்கு வந்தால், ரவுடியிசம் தலை துாக்கிவிடும்; பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்றல்லவா, அ.தி.மு.க.,வினர் பிரசாரம் செய்கின்றனர்...' என, போட்டுக் கொடுக்கத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேச்சு.மத்திய அரசு சார்பில், மாநிலத்தில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளும், தமிழில் தான் நடத்தப்பட வேண்டும். இதை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்


latest tamil news
'தமிழில் தேர்வு எழுதி வென்றவரை, ஒடிசாவில், மத்திய அரசு பணியில் அமர்த்தினால், மொழி தெரியாமல் அவர் சிரமப்பட மாட்டாரா...' என, கேட்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை.ஒரு வாரத்திற்கும் மேலாக, தென் மாவட்டங்களில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 40 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க, தமிழக அரசு முன்வர வேண்டும். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
- ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ


'மழையால், பல தரப்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்; விவசாயிகளுக்கு மட்டும் இழப்பீடு கேட்பது ஓரவஞ்சனை. நெசவாளர்கள், கூலித் தொழிலாளர்களை மறந்து விடுகிறீர்களே...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை.அமைச்சர்கள் போட்டுக் கொள்ளலாம் என, மத்திய அரசு அனுமதி அளித்த உடன், கொரோனா தடுப்பூசியை நான் போட்டுக் கொள்வேன்; அதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
- அமைச்சர் விஜயபாஸ்கர்


'முன்களப் பணியாளர்களுக்கு எல்லாம் முன்களத்தில் நின்று பணியாற்றிய உங்களுக்கும், தடுப்பூசி அவசியம் தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.


Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
19-ஜன-202113:49:38 IST Report Abuse
Suppan இந்தக் கழகத் தலைவரே துண்டுசீட்டில் உள்ள தமிழைக் கூட ஒழுங்காகப் படிக்கத்தெரியாமல் உளறுகிறார். இந்த லட்சணத்தில் இருக்கிறது இவர் "படித்த" படிப்பு. வீரமணி இவருக்குப் பாடம் எடுப்பாரா?
Rate this:
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
19-ஜன-202116:22:43 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamyவீரமணி இவருக்குப் பாடம் ? விளங்குமா ?...
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
19-ஜன-202113:44:25 IST Report Abuse
pattikkaattaan அமைச்சர் வேலுமணி அவர்கள் அடுத்த தமிழக முதல்வர் ஆகவேண்டும் .. குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி .. அம்மா இல்லாத பிள்ளைங்க எல்லாரும் நல்லா வளர்ந்துட்டாங்க
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
19-ஜன-202116:20:34 IST Report Abuse
ShivRam ShivShyamகரெக்ட் .. திறமைசாலி உழைப்பாளி மற்ற கட்சிகளில் பெரிய தலைவர் பதவி அல்லது CM ஆக முடியும் ..ஆனால் கான்கிராஸ் தீயமுக ரெண்டிலும் அவர்கள் குடும்பமே கட்சி தலைமை பொறுப்பில் இருக்கும்...
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
19-ஜன-202113:25:27 IST Report Abuse
madhavan rajan மாநில டாக்டர் சங்க நிர்வாகிகள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. அந்த சங்க டாக்டர்கள் மீது நம்பிக்கையில்லாமல்தானே பல அரசியல் தலைவர்கள் இந்தியாவிலேயே (நமது மாநிலம் உள்பட) சிகிச்சை பெறாமல் வெளிநாட்டுக்கு ஓடுகிறார்கள். அவர்களுக்கு அறிவுரை கூறுவதுதான முறையாக இருக்கும். அந்த சங்கத்தில் உள்ள எவ்வளவு டாக்டர்கள் அந்த சங்க டாக்டர்களிடம் சிகிச்சை பெற முனைவார்கள் என்பது அடுத்த கேள்வி. இவர்கள் சங்கத்தில் உள்ள டாக்டர்களுக்கே இவர்கள் மீதி நம்பிக்கையில்லை. இந்த லட்சணத்தில்.............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X