பொது செய்தி

தமிழ்நாடு

டாக்டர் சாந்தா மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

Updated : ஜன 19, 2021 | Added : ஜன 19, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி: மருத்துவ சேவைக்காக மகசசே, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகளை வென்ற, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர், டாக்டர் சாந்தா (வயது 93) மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் சாந்தா, உடல்நலக்குறைவால் காலமானார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு,
டாக்டர் சாந்தா, தலைவர்கள், இரங்கல், பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி,

புதுடில்லி: மருத்துவ சேவைக்காக மகசசே, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகளை வென்ற, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர், டாக்டர் சாந்தா (வயது 93) மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் சாந்தா, உடல்நலக்குறைவால் காலமானார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி, இன்று(ஜன.,19) அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை:


பிரதமர் மோடி
latest tamil news
பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: புற்றுநோய்க்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதற்கு பாடுபட்ட டாக்டர் வி.சாந்தா , என்றும் எல்லாரது நினைவிலும் இருப்பார். ஏழை மற்றும் எளிய மக்களுக்கு சேவை செய்வதில், சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனம் முன்னணியில் உள்ளது. 2018 ம் ஆண்டு அந்த மையத்திற்கு சென்றதை நினைவு கூர்கிறேன். டாக்டர்.வி.சாந்தா மறைவு வருத்தமளிக்கிறது. ஓம் சாந்தி .இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்அடையாறு புற்றுநோய் நிறுவன தலைவர் டாக்டர் வி.சாந்தா, இப்போது நம்முடன் இல்லை. ஏழை எளியவர்களுக்கு சேவை எப்போதும் சேவை செய்வதற்காகவும், புற்றுநோயை முற்றிலும் குணமாக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திலும் மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்தவர். ஒரு துறவி நம்மிடம் இல்லை.

முதல்வர் பழனிசாமிமுதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:

டாக்டர் சாந்தா அவர்களை இழந்து வாடும் சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த டாக்டர் சாந்தா அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அன்னாரின் தன்னலமற்ற சேவையினை கவுரவிக்கும் விதமாகவும், அன்னாரின் தன்னலமற்ற சேவையினை கவுரவிக்கும் விதமாகவும் அன்னாரின் இறுதி சடங்குகளின் போது, போலீஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளேன்.


தெலுங்கானா கவர்னர் தமிழிசைசென்னை,அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் நிறுவனத்தலைவர் டாக்டர். வி.சாந்தா அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். புற்றுநோய் நோயாளிகளுக்காக தன் வாழ்நாள் முழுவதும் சேவையாற்றியவர். மருத்துவ சேவையை ஆலயமாக உருவாக்கி ஆலமரமாக வளர்த்தவர். மருத்துவ சேவைக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது பயனாளிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக தலைவர் ஸ்டாலின்:

துணை முதல்வர் பன்னீர்செல்வம்சென்னை-அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சிறந்த சமூக சேவகருமான டாக்டர் வி.சாந்தா அவர்கள் இன்று உடல் நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகள் வென்றுள்ள இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க தன்னலமின்றி அர்ப்பணிப்போடு பணியாற்றியதால் மாண்புமிகு அம்மா அவர்கள் உட்பட அனைவரது பாராட்டுக்களையும் பெற்றவர்.அவரது மறைவு புற்றுநோய் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

65 ஆண்டுகளுக்கு மேலாக தனது ஓய்வற்ற சமூக சேவையால் அனைத்து தரப்பு மக்களின் அன்பை பெற்ற டாக்டர் வி.சாந்தா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
மதிமுக தலைவர் வைகோ:


புற்றுநோய் மருத்துவத்தில் அனைத்து இந்திய அளவில் முன்னோடிகளில் முதன்மையானவரும், தமிழக மகளிருக்குப் பெருமை சேர்த்தவருமான மருத்துவர் சாந்தா அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். 1954 ஆம் ஆண்டு நிறுவப் பெற்ற அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தில், 1955 ஆம் ஆண்டு பயிற்சி மருத்துவராக சேர்ந்த மருத்துவர் சாந்தா, கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொறுப்பு வகித்து வரலாறு படைத்து இருக்கின்றார். தமிழ்நாட்டில் யாருக்கேனும் புற்றுநோய் என்று தெரிய வந்தால், உடனடியாக அவர்கள் நினைவுக்கு வருவது சாந்தா என்ற பெயர்தான். அந்த அளவிற்கு பொறுப்புடனும், கடமை உணர்ச்சியுடனும் தொண்டு ஆற்றி இருக்கின்றார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த காலத்தில், அடையாறு மருத்துவ மனையில்தான் சேர்க்கப்பட்டு இருந்தார். அந்தக் காலகட்டத்தில் புற்றுநோய் வந்தால் பிழைக்க முடியாது என்ற நிலைதான் இருந்தது. அதன்பிறகு கடந்த 50 ஆண்டுகளில் அடையாறு புற்றுநோய் மருத்துவ கழகம் மிகப்பெரிய வளர்ச்சி பெற்று, புற்று நோய் மருத்துவத்தில் அனைத்து இந்தியாவிலும் முன்னோடியாகத் திகழ்கின்றது. அதற்கான பெருமையில் பெரும்பங்கு மருத்துவர் சாந்தா அவர்களுக்கே சாரும். ஏழை எளிய மக்களும், எல்லோரும் எளிதில் அணுகக் கூடியவராக மருத்துவர் சாந்தா திகழ்ந்தார்.

எத்தனையோ நோயாளிகளுக்கு நான் பரிந்துரை செய்து அனுப்பி இருக்கின்றேன். அதற்காக அவருடன் பலமுறை பேசி இருக்கின்றேன். கனிவுடன் கேட்பார்; இயன்ற உதவிகள் அனைத்தும் செய்வார். பணம் அவருக்கு ஒரு பொருட்டு அல்ல. மருத்துவ அறத்துடன் இயங்கினார். அதனால் எத்தனையோ பெரிய நிறுவனங்கள் அடையாறு புற்றுநோய் மருத்துவ கழகத்திற்கு நன்கொடைகளை அள்ளி வழங்கி வருகின்றார்கள்.

பத்மஸ்ரீ பத்மபூஷன் பத்மவிபூஷன் ஆகிய சிறப்புகளை இந்திய அரசு அவருக்கு வழங்கி இருக்கின்றது. ஆசியாவின் மிகப்பெரிய விருதான பிலிப்பைன்ஸ் நாட்டின் ராமன் மகசேசே விருது பெற்று இருக்கின்றார். அந்தவகையில் தனக்கு கிடைத்த பணம் முழுமையும் அடையாறு புற்றுநோய் மருத்துவ கழகத்திற்கு வழங்கிவிட்டார்; தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில், என்றைக்கும் அழியாத இடத்தைப் பெற்றுவிட்டார் அவர் புகழ் வாழ்க.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
veerakathy sivarajah - st.gallen ,சுவிட்சர்லாந்து
20-ஜன-202100:43:21 IST Report Abuse
veerakathy sivarajah தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா அம்மையாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்
Rate this:
Cancel
Saravanan - Denver,யூ.எஸ்.ஏ
19-ஜன-202122:16:30 IST Report Abuse
Saravanan பாதம் பணிகிறேன்.
Rate this:
Cancel
Natarajan Ramasamy - Chennai,இந்தியா
19-ஜன-202118:58:49 IST Report Abuse
Natarajan Ramasamy வைகோ எழுதிய வார்த்தைகள் பணம் அவருக்கு ஒரு பொருட்டு அல்ல. மருத்துவ அறத்துடன் இயங்கினார் - முத்தானவை . தனக்கு பின்னும் அதே வழியில் நடத்த சரியான மருத்துவர்களை விட்டு விட்டு சென்று இருக்கிறார். தமிழ் நாடு பெருமைகொள்ள தக்க தேவதை. இந்தியா அரசு இவருக்கு பாரத ரத்னா கொடுத்து தன்னை கௌரவித்து கொள்ளலாம் . ஒரு பெரிய சாலைக்கு அவர் பெயரை சூட்டவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X