அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமலுக்கு அறுவை சிகிச்சை; நலமுடன் உள்ளதாக தகவல்

Updated : ஜன 19, 2021 | Added : ஜன 19, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை: காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தற்போது நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறு விபத்தினால் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனின் காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனிடையே கட்சிப் பணி, நடிப்பு, டிவி
KamalHaasan, MNM, Operation, Daughters, Statement, கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம், அறுவை சிகிச்சை, நலம்

சென்னை: காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தற்போது நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறு விபத்தினால் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனின் காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனிடையே கட்சிப் பணி, நடிப்பு, டிவி நிகழ்ச்சி உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து கமல்ஹாசன் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், தனது காலில் தொடர்ந்து வலி இருந்து வருவதாகவும், இதனால் மீண்டும் ஒரு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் அறிக்கை வாயிலாக கமல்ஹாசன் தெரிவித்தார்.

அதன்படி, சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் எலும்பியல் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட கமல்ஹாசன் தற்போது நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக் ஷரா ஹாசன் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:


latest tamil news



இன்று காலை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் எங்கள் அப்பாவுக்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமுடன் உற்சாகமாக இருக்கிறார். அப்பாவை மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நல்லமுறையில் பார்த்துக் கொள்கிறார்கள். 4,5 நாட்களுக்கு பிறகு அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களை சந்திப்பார். மகிழ்விப்பார். அனைவரது அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r ganesan - kk nagar chennai,இந்தியா
19-ஜன-202116:55:10 IST Report Abuse
r ganesan அப்பல்லோ காவேரி மருத்துவ மனையில் சேராமல் ராமச்சந்திர மருத்துவ மனையில் சேர்ந்த்துக்கு. நன்றி. இருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்தி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றிருந்தால் முன் மாதிரியாக அமைந்திருக்கும்
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
19-ஜன-202116:09:56 IST Report Abuse
வெகுளி விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் கமல் ... பொறுப்புள்ள தகப்பனாக பெண்களுக்காவது நல்ல குடும்ப வாழ்க்கையை அமைத்து கொடுங்கள்....
Rate this:
Cancel
rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்
19-ஜன-202115:54:40 IST Report Abuse
rajan_subramanian manian கருத்து கன்னிப்பின்படி சுடலை 160,அதிமுக 70,என்னது உலக்கை, மற்றும் ஆமைக்கு 4 மட்டும்தானா ?அய்யகோ மறுபடி உலக்கை வெளிநாடு செல்ல வைத்துவிட்டீர்களே ? கைலாச செல்ல இப்பொழுதே முன்பதிவு செய்யவும்.
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
19-ஜன-202117:19:13 IST Report Abuse
ShivRam ShivShyamஎன்ன சார் .....
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
19-ஜன-202117:24:57 IST Report Abuse
ShivRam ShivShyamகன்னி என்றெல்லாம் போட்டால் ... கோமாளிகாசன் எழுந்து வந்து விடுவார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X