200 ஓட்டுக்கு, 9 பேர் 'டீம்' ரெடி; தேர்தலுக்கு ஆளுங்கட்சி அதிரடி

Updated : ஜன 19, 2021 | Added : ஜன 19, 2021
Share
Advertisement
'டிவி' நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்த சித்ராவுக்கு, சுக்கு டீ கொடுத்து உபசரித்த மித்ரா, ''ஆளுங்கட்சி தரப்புல ரொம்பவே ஆடிப்போயிட்டாங்களாமே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''ஆமாப்பா, எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை தடபுடலா கொண்டாடுற ஆர்வத்துல, 'கொடிசியா' மைதானத்துல, ரேக்ளா பந்தயம் நடத்துனாங்க. சீறிப்பாய்ந்து வந்த ஒரு காளை, தடுப்பு கட்டைகளை உரசிட்டு ஓடுச்சு. அந்த
200 ஓட்டுக்கு, 9 பேர் 'டீம்' ரெடி; தேர்தலுக்கு ஆளுங்கட்சி அதிரடி

'டிவி' நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்த சித்ராவுக்கு, சுக்கு டீ கொடுத்து உபசரித்த மித்ரா, ''ஆளுங்கட்சி தரப்புல ரொம்பவே ஆடிப்போயிட்டாங்களாமே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.

''ஆமாப்பா, எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை தடபுடலா கொண்டாடுற ஆர்வத்துல, 'கொடிசியா' மைதானத்துல, ரேக்ளா பந்தயம் நடத்துனாங்க. சீறிப்பாய்ந்து வந்த ஒரு காளை, தடுப்பு கட்டைகளை உரசிட்டு ஓடுச்சு. அந்த ஏரியாவுல நின்னுக்கிட்டு இருந்த ஒருத்தரு, தடுப்பு மேல ஏறி குதிச்சு தப்பிச்சிட்டாரு.இருந்தாலும், தொடையில் உரசியதால, காயம் ஏற்பட்டுச்சு. நல்லவேளை சின்ன காயத்தோடு போயிருச்சுன்னு, ஆளுங்கட்சி பிரமுகர்கள் பெருமூச்சு விட்டிருக்காங்க. உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தா, எதிர்க்கட்சிக்காரங்க பிரச்னையை ஊதி பெருசாக்கியிருப்பாங்கன்னு பேசிக்கிட்டாங்க,''

''இதய தெய்வம் மாளிகையில் திருவிழா போல் நிர்வாகிகள் கூடியிருந்தாங்களே, எலக்சன் ஆலோசனை கூட்டமா,''

''நீ சொல்றது கரெக்ட்டுதான், மித்து! மைக்ரோ லெவலில் ஓட்டு வங்கியை தயார்படுத்துறதுக்கு 'அட்வைஸ்' பண்ணியிருக்காங்க. தி.மு.க., கூட்டணி பிரசாரம் ஒருபுறம் இருந்தாலும், கமல் பிரசாரமும் ஆளுங்கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துமோன்னு பயப்படுறாங்க. எம்.ஜி.ஆர்.,க்கும் அவருக்கும் உள்ள உறவை பேசுறதுனால, எம்.ஜி.ஆர்., விசுவாசிகள், மாத்தி ஓட்டுப் போட்டுடுவாங்களோன்னு, நினைக்கிறாங்க,''

''200 ஓட்டுக்கு, ஒன்பது நிர்வாகிகளை நியமிச்சிருக்காங்க. அமைப்பு ரீதியா நாலு பேர்; இளைஞர்/ இளம்பெண் பாசறையில் மூணு பேர்; ஐ.டி., விங்க்ல இரண்டு பேருன்னு, ஒன்பது பேர் கொண்ட 'டீம்' பொறுப்புன்னு சொல்லிருக்காங்க. 'நோட்டு' கொடுக்குறதுக்கும் 'பார்முலா' ரெடி பண்ணியிருக்காங்களாம். ஏரியாவுக்கு தகுந்த மாதிரி, ஆட்களுக்கு தகுந்த
மாதிரி, 'கவர் வெயிட்' இருக்குமாம்,''

''வேட்பாளரையே இன்னும் இறுதி செய்யலை. அதுக்குள்ள, சி.எம்., தேர்தல் பிரசாரத்துக்கு வரப்போறாராமே,''

''மித்து, அ.தி.மு.க., ஆட்சி அதிகாரத்துக்கு வர்றதுக்கு, கொங்கு மண்டலம்தான் கை கொடுக்குது. நடக்கப்போற எலக்சன்ல, கொங்கு மண்டலத்தை குறிவச்சு, தி.மு.க.,வும் காய் நகர்த்திட்டு வருது. கோட்டையில் ஓட்டை விழுந்திடக்கூடாதுன்னு, ரொம்பவும் 'அலார்ட்'டா இருக்காங்க,''

''இது, முதல்கட்ட பிரசாரம்தானாம். தேர்தல் அறிவிப்புக்கு பின்னாடி, மறுபடியும் வருவாராம். சி.எம்., பிரசார நிகழ்ச்சிக்கு, ஸ்டாலினுக்கும், கமலுக்கும் திரண்ட கூட்டத்தை விட, அதிகமா இருக்கணும்னு நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டிருக்காங்க,'' என்றபடி, 'டிவி' யை ஆப் செய்த சித்ரா, ''கல்யாண ஏற்பாடு நடக்குதாமே,'' என, கேட்டாள்.

''ஆமாக்கா, ஜெ., பிறந்த நாளையொட்டி, 73 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்துறதுக்கு, அமைச்சர் வேலுமணி ஏற்பாடு செஞ்சிருக்காரு. போன தடவை தடபுடலா ஏற்பாடு செஞ்சிட்டு, 'கொரோனா' பிரச்னையால, அந்தந்த ஏரியாவுல, 'சிம்பிளா' முடிச்சிட்டாங்க,''

''இந்த வருஷம் அந்தந்த ஏரியாவுல வட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் முன்னிலையில், கோவிலில் நடத்தச் சொல்லியிருக்காங்களாம்,'' என்ற மித்ரா,

''கலெக்டர் ஆபீசுக்கு போகணும், வர்றீங்களா,'' என, அழைப்பு விடுத்தாள்.

''இதோ, வந்துட்டேன்,'' என்றபடி, ஸ்கூட்டரை 'ஸ்டார்ட்' செய்தாள் சித்ரா.

பின் இருக்கையில் அமர்ந்த மித்ரா, ''இடையர்பாளையத்துல இருக்குற ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு பொங்கல் பொருட்களை கொடுக்காம, ஏமாத்தியிருக்காங்க. குடியிருப்போர் நலச்சங்கத்தினர், அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு போனாங்க. அவுங்க ஆய்வு செஞ்சபிறகே, பொங்கல் பரிசு தொகை கொடுத்திருக்காங்க; ரேஷன் கடை ஊழியர்களை, 'லெப்ட் ரைட்' வாங்கிட்டாங்களாம்,''

கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள போஸ்ட் ஆபீஸ் எதிரே ஸ்கூட்டரை நிறுத்திய சித்ரா, ''மித்து, மேற்கு மண்டல தபால்துறை தலைவரா இருக்குற சுமிதா அயோத்யா, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையானா, ஏதாச்சும் ஒரு போஸ்ட் ஆபீசுக்கு 'விசிட்' போறாரு. எங்கே போகப்போறோம்னு யாரிடமும் சொல்றதில்லையாம்; காரில் ஏறி உட்கார்ந்ததும், டிரைவரிடம் மட்டும் சொல்றாராம்,''

''திடுதிப்புன்னு உயரதிகாரி வர்றதுனால, ஊழியர்கள் பீதியாகிடுறாங்க. 'லேட்'டா வேலைக்கு வந்த ஊழியர்களை கண்டிச்சு, விளக்க கடிதம் எழுதி வாங்கியிருக்காரு. ஒரு போஸ்ட் ஆபீசுல, ஆதார் மெஷின் ரிப்பேர்னால, பொதுமக்களை திருப்பி அனுப்பியதை பார்த்து, ஒரு மெஷினை சரி பார்க்காம, மக்களை ஏன் அலைய விடுறீங்கன்னு, 'டோஸ்' விட்டிருக்காரு,''

''அப்புறம் என்னாச்சு,'' என, ஆர்வக்கோளாறில், கேட்டாள் மித்ரா.

''சேமிப்பு தொகையை எடுக்க வந்த முதியவரை அலைய வச்சதை கேள்விப்பட்டதும், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியா நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்காரு,''

''இதே மாதிரி, எல்லா துறை அதிகாரிகளும் அதிரடி ஆய்வில் ஈடுபட்டா, எவ்ளோ நல்லாயிருக்கும்,'' என்றபடி, கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்தாள் மித்ரா.

பின்தொடர்ந்து சென்ற சித்ரா, ''மித்து, கருவூலத்துறையில் எந்த பைல், 'மூவ்' ஆகுறதா இருந்தாலும், கரன்சி கேட்குறதா புகார் எழுந்திருக்கு. பண்டிகை முன் பணம் கொடுக்கறதுக்கு, ஒவ்வொரு துறையில் இருந்தும் தொகை வாங்கியிருக்காங்க. லேடி துாய்மை பணியாளர் ஒருத்தர், ஜி.பி.எப்., பணம் வாங்குறதுக்கு 'அப்ளை' செஞ்சிருக்காங்க; அவரிடமும், அஞ்சாயிரம் ரூபாய் பறிச்சிருக்காங்க,''

''அடப்பாவமே, கலெக்டர் ஆபீசுக்குள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்காரங்க வர மாட்டாங்களா,'' என, அங்கலாய்த்துக் கொண்ட மித்ரா, மரத்தடியில் காத்திருந்த தோழியை சந்தித்து பேசினாள்.

பின், ஸ்கூட்டரை 'ஸ்டார்ட்' செய்து, அரசு மருத்துவமனை வழியாக இருவரும் கிளம்பினர்.
மருத்துவமனையை பார்த்த சித்ரா,

''கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு ஸ்கேன் எடுக்க போனா, ஒரு வாரம் கழிச்சு வரச் சொல்றாங்களாம். கட்டணம் குறைவுங்கிறதுனால, பொறுமையா இருந்து, ஏழை எளிய ஜனங்க போறாங்க; ஆனா, 'ரிப்போர்ட்' கொடுக்க, 'லேட்' பண்றாங்க. சில சமயங்களில், டீரீட்மென்ட்டுல இருக்கறவங்க, 'ரிப்போர்ட்'டை மாத்தி கொடுத்திடுறாங்களாம். யாருக்காவது மாத்தி, ஆபரேசன் செஞ்சா, என்ன ஆகுறது,'' என, நொந்தபடி வீட்டை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X