ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இளைய இந்தியா : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : ஜன 19, 2021 | Added : ஜன 19, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வைத்து டெஸ்ட் தொடரை வென்று, இளம் இந்திய அணி மகத்தான சாதனை படைத்துள்ளது. இந்த நிகழ்வு டுவிட்டரில் பல ஹேஷ்டாக்குகளில் டிரெண்ட் ஆனது. இந்திய அணி வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‛பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று
INDvsAUS, IncredibleIndia, YoungIndia, BCCI, brisbanetest,

பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வைத்து டெஸ்ட் தொடரை வென்று, இளம் இந்திய அணி மகத்தான சாதனை படைத்துள்ளது. இந்த நிகழ்வு டுவிட்டரில் பல ஹேஷ்டாக்குகளில் டிரெண்ட் ஆனது. இந்திய அணி வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‛பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என, சமநிலையில் இருந்தது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 369, இந்தியா 336 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அண 294 ரன்கள் எடுத்தது.


latest tamil news
பின், 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி சுப்மன் கில் (91), புஜாரா (56), ரிஷாப் பன்ட் (89) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனையடுத்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி தொடர்ந்து 2வது முறையாக 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பை வென்றது. தவிர, இம்மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக தோல்வியை தழுவியது.

இந்திய அணி வெற்றி பெற்ற நிகழ்வு டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. அதிலும் நான்காவது போட்டியில் விளையாடிய பெரும்பாலானவர்கள் இளம் இந்திய வீரர்கள் ஆவர். அவர்களை வைத்து இந்திய அணி, அதுவும் அஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வெற்றி பெற்று இருப்பது வரலாற்று சாதனை என பலரும் புகழ்ந்து வருகின்றனர். விராட் கோஹ்லி, ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, ஷமி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. வீரர்கள் அடுத்தடுத்து காயங்களால் வெளியேறினர். இருப்பினும் இந்திய அணி மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளது. வரலாறு படைக்கப்பட்டது. என்ன ஒரு டீம், என்ன ஒரு டெஸ்ட் தொடர், இந்திய அணி விளையாடிய விதம் நம்ப முடியாதது. ரஹானேவின் சிறந்த தலைமை. அனைத்து இளம் இந்திய வீரர்களும் சிறப்பாக விளையாடினர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.


latest tamil news
இதன்காரணமாக டுவிட்டரில் #INDvsAUS, #Siraj, #IncredibleIndia, #YoungIndia, #ProudMoment, #BCCI, #brisbanetest, #pujara, #Shubmangill, #TestofChampions, #testmatch, #BleedBlue, #IndiaB, #IndiaIndia என பல ஹேஷ்டாக்குகளில் இந்திய அணியின் வெற்றியை டுவிட்டர் தளவாசிகள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஹேஷ்டாக்குகள் அனைத்தும் டுவிட்டர் இந்தியாவில் டாப் 20-ல் டிரெண்ட் ஆகின.

ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசளிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
19-ஜன-202120:09:59 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ அனைவருமே அனுபவ வீரர்களாகத்தான் மட்டுமே டெஸ்ட் போட்டிக்கு வேண்டும் அப்போதுதான் ட்ராவாவது செய்ய இயலும் என்ற மனப்போக்கை செலக்சன் போர்ட் மாற்றிக்கொள்ள வேண்டும், இளம் கன்றுகள் பயமறியாது என்பதால் ஒன்றிரண்டு பவுட்டரி அடித்து மிரட்டினாலே பந்துவீச்சாளரின் வீசுதிறன் பாதிக்கப்பட்டு ஆட்டம் நமக்கு சாதகமாக திரும்பிவிடும், இந்த கடைசி டெஸ்ட் அதைத்தான் நிருபிக்கிறது, 300பந்துகளை எதிர்கொண்டு 24ஓட்டம் 120பந்துகளை எதிர்கொண்டு 20ஓட்டம் என்று அனுபவ வீரர்கள் எடுத்து அவுட்ஆகும்போது அடுத்த இன்னிங்ஸ் சாதகமாக அமையாது,
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-ஜன-202117:13:42 IST Report Abuse
J.V. Iyer இப்படித்தான் திமுகவை வீழ்த்தும் அதிமுக கூட்டணி.
Rate this:
B. MANI 003 - Kanchipuram,இந்தியா
20-ஜன-202109:10:22 IST Report Abuse
B. MANI 003இதில் அரசியல்...
Rate this:
Cancel
19-ஜன-202117:05:02 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K அற்புதம், பிரமாதம், கவாஸ்கர் டீம், அசாருதின் டீம், கங்குலி டீம், தோனி டீம், கோலி டீம் எல்லாம் இந்நேரம் தொடரை இழந்திருப்பார்கள். ராஹானே தலைமையிலான இளைய தலைமுறையினரின் ஆட்டம் மிக அருமை. அதிலும் தமிழக வீரர்கள் அஷ்வின், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் என்கிற மும்மூர்த்திகளின் ஆட்டம் மெச்ச தகுந்த வகையில் இருந்தன. 👍👍👍கில், பண்ட், புஜாராவின் ஆட்டம் சூப்பர். 👍👍👍👍
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X